
"கால் இறகு பந்து விளையாட்டு, எளிமையாக உள்ளது. உடல் நலத்துக்குத் துணை புரிகிறது. நண்பர்களுக்கு வழங்கக் கூடிய மிகச் சிறப்பான அன்பளிப்பே இறகு பந்து. எனது கால்களைப் பாருங்கள். எனக்கு வயது 18 போல் உணர்கின்றேன்" என்று கால் இறகு பந்து உதைத்து விளையாடிக் கொண்டிருந்த ஒருவர் செய்தியாளரிடம் கூறினார்.
வட்டமாக சூழ்ந்து இறகு பந்தை உதைத்து விளையாடியவர்களைத் தவிர, வேறு சிலரும் கடினமான கவர்ச்சிகரமான அபிநயங்களை பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களில் சிவப்பு ஆடை அணிந்த மூதாட்டி, மக்களின் கவனத்தை மிக அதிகமாக ஈர்த்தார். நரைத்த தலைமயிர் கொண்ட அவர் பாவனை செய்தது. இறகு பந்தை உதைக்கும் சைகை நடனம் போல் அழகாக இருந்தது. இவ்வாண்டு 71 வயதான அவர், சாங் யீ மோவ் எடுத்த பிரசாரத் திரைப்படத்தில் இறகு பந்தை உதைத்த மூதாட்டி தான். அவரின் பெயர் லியூ சின் லுவான். கால் இறகு பந்து விளையாட்டு மூலம் ஒலிம்பிக் பற்றி பிரச்சாரம் செய்வதில், மிகவும் மகிழ்ச்சி அடைவதாக அவர் செய்தியாளரிடம் கூறினார்.
1 2 3 4
|