• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-17 19:34:54    
உடல் நலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் கால் இறகு பந்து

cri

கால் இறகு பந்து விளையாட்டு, வேடிக்கையாக இருப்பதோடு உடல் நலத்துக்குத் துணை புரிகிறது என்பதால், சீன மக்களிடையில் மிகவும் வரவேற்கப்பட்டு வருகிறது. வார இறுதி வரும் போதெல்லாம், பூங்காவில் பல பத்து பேர் கால் இறகு பந்தை உதைத்து விளையாடுகின்றனர். கால் இறகு பந்து விளையாட்டில் அடிக்கடி கலந்து கொண்டடவர்கள் நண்பர்களாக மாறியுள்ளனர். கால் இறகு பந்து விளையாட்டு மூலம், உடற்பயிற்சி செய்து, தாங்கள் மகிழ்வதோடு, பலருடன் நண்பராகி, பணி அழுத்தத்தையும் குறைக்கலாம். இவையனைத்தும் இக்கால மக்களுக்கு மிகவும் தேவைப்படுகின்றன.

மேற்கூறிய மூதாட்டி லியூ சின் லுவான் அவர்களைத் தவிர, பெய்ஜிங்கில் கோ சி ச்செங் என்பவர், கால் இறகு பந்து விளையாட்டில் புகழ்பெற்றவர் ஆவார். இவ்விளையாட்டில் தலைசிறந்த மாணவர்கள் பலரை அவர் வளர்த்துள்ளார். 10 வயது முதல் இன்று வரை, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர் கோ கால் இறகு பந்து விளையாடி வருகிறார். இறகு பந்தை உதைத்து விளையாடும் தனது செயலில், நாடகம், ஊ சு, ஜிம்னாஸ்டிக்ஸ், கழைக்கூத்து, நடனம் ஆகியவற்றின் நுட்பங்கள் சேர்ந்து, சீனத் தேசத்தின் ஆழமான அகன்ற, பாரம்பரிய பண்பாடு வெளிப்படுத்தப்படுகிறது என்று ஆசிரியர் கோ அறிமுகப்படுத்தினார்.


1 2 3 4