• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-17 21:23:20    
பெய்ஜிங் 2008 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா சிறப்பு நிகழ்ச்சி அ

cri
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் பண்ணாகும். இன்றிரவு, இவ்விசை, சீனத் தலைநகரான பெய்ஜிங்கிலுள்ள பறவை கூடு என்னும் தேசிய விளையாட்டரங்கில் மீண்டும் ஒலிக்கப்பட்டது. பெய்ஜிங் 2008 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி 11 நாட்களாக நடைபெற்று இன்றிரவில் நிறைவடைந்தது.

கடந்த 11 நாட்களில், 147 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 4000க்கும் அதிகமான மாற்று திறனுடைய விளையாட்டு வீரர்கள், விஞ்சும் தன்மை, ஒருமைப்பாடு, பகிர்தல் ஆகியவற்றின் தலைப்பில், இன்னல்களைச் சமாளித்து தன்னம்பிக்கையுடன் பாடுபடுதல், வாழ்க்கையை நேசித்தல், தனது சாதனையை விஞ்சுதல் என்ற எழுச்சியை வெளிப்படுத்தி, விளையாட்டுக்கள் கொண்டுவரும் ஆர்வத்தையும் இன்பத்தையும் அனுபவித்தனர். உடல் நலமுடையோரின் மனமும் தூய்மைப்படுத்தப்பட்டது.

17ம் நாளிரவு, பெய்ஜிங்கில் மிதமான சூழ்நிலையில் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. மறக்கவே முடியாத கடந்த 11 நாட்கள் நடைபெற்ற போட்டிகள் மக்களது நினைவுகளில் அலைமோதின. பெய்ஜிங்கின் இலையுதிர் கால காட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சியான் சான் மலையில் காணப்படும் சிவப்பு இலையை அடிப்படையாக கொண்ட கலை நிகழ்ச்சிகள் விழாவில் அரங்கேற்றப்பட்டன. இவற்றின் மூலம் உலகில் வாழ்கின்ற மாற்று திறனுடையோர் அனைவருக்கும் சீன மக்களின் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

1 2 3 4