• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-17 21:23:20    
பெய்ஜிங் 2008 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா சிறப்பு நிகழ்ச்சி அ

cri

இப்போட்டியின் முதல் நாளில், பிரிட்டனின் மிதி வண்டி அணி, 3 தங்கப் பதக்கங்களை பெற்று, 3 உலக சாதனைகளை முறியடித்தது. இந்த அணியைச் சேர்ந்த David Simon 1 நிமிடம் 14.936 வினாடி என்ற சாதனையுடன் உலக சாதனையை முறியடித்து, ஆண்களுக்கான LC3-4 நிலை ஒரு கிலோமீட்டர் மிதி வண்டி போட்டியின் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அவர் மகிழ்ச்சியுடன் கூறியதாவது

தங்கப் பதக்கத்தை பெற்றவுடன் வியப்பு அடைந்தேன். பதக்கத்தை பெற வந்தேன். ஆனால், இந்தத் தருணம் உண்மையாக வந்த போது, எனது மனநிலை எதிர்பார்த்ததை விட மேலும் சிறப்பாக இருந்தது என்றார் அவர்.

அவரைப் போல், பல விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், அதிக சாதனைகளை உருவாக்கினர். ஸ்லோவாக்கிய வீராங்கனை Veronika Vadovicova, R2 நிலை 10 மீட்டர் மகளிர் துப்பாக்கி சுடுதல் SH1 ரக போட்டியில் பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை பெற்றார். லாவோஸ் வீரர் Eay Simay, 48 கிலோகிராம் ஆடவர் பளு தூக்குதல் போட்டியின் B குழுவில் வெண்கல பதக்கத்தை பெற்றார். இந்த பதக்கம், லாவோஸ் நாடு, பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெற்ற முதலாவது பதக்கமாகும். ஜப்பானிய ஜுடோ வீரர் Satoshi Fujimoto சொன்னது போல, பகத்தங்களைப் பெற மாற்று திறனுடையோர் உடல் நலனுடையோரை விட 3 மடங்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அவர் கூறியதாவது

உடல் நலமுடையோரை போல் முயற்சி மேற்கொண்டால், போட்டியில் தோல்வி தான். அவர்களை போல் 2 மடங்கு முயற்சி மேற்கொண்டால், போட்டிகளில் சம நிலையை பெறலாம். 3 மடங்கு முயற்சி மேற்கொண்டால் தான், வெற்றி பெற முடியும் என்றார் அவர்.

1 2 3 4