பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுத் தலைவர் லியூ சி சியாங் சான் மலையின் சிவப்பு இலையின் நல்வாழ்த்து என்ற தலைப்பில் நிறைவு விழாவில் உரை நிகழ்த்தினார்.
சக்கர வண்டியில் உட்கார்ந்திருந்திருந்த சர்வதேச பாராலிம்பிக் கமிட்டித் தலைவர் கிரேவன் தரையில் கிடந்த சிவப்பு இலை ஒன்றை எடுத்து சட்டை பையில் வைத்து கொண்டார். பாராலிபிக்கிற்கான சீன மக்களின் நல்வாழ்த்துக்களை அவர் பெற்றதாக அவருடைய செயல் பொருள்படுகின்றது. பிறகு அவர் எதிர்காலத்திற்கான கடிதம் என்ற தலைப்பில் உணர்வுபூர்வ உரை நிகழ்த்தினார்.
நிறைவு விழாவில் பெய்ஜிங் மாநகர மேயர் கோ ஜிங் லுங் சர்வதேச பாராலிம்பிக் கொடியை சர்வதேச பாராலிம்பிக் கமிட்டித் தலைவர் கரேவனிடம் ஒப்படைத்தார். கரேவன் அடுத்த பாராலிம்பிக் விளையாட்டுப் போடியை நடத்தும் லண்டன் நகர மேயர் போரிஸ் ஜாண்சனிடம் அக்கொடியை ஒப்படைத்தார்.
பறவைகே கூடு அரங்கில் 90 ஆயிரம் இரசிகர்களின் கண்களுக்கு முன்னால், முதியோர் ஒருவர் விழிப்புலனற்ற சிறுவனை அழைத்து கொண்டு, அரங்கின் மையத்தை வந்தடைந்தார். விழிப்புலனறற்றோர் மொழியில், "என்றுமே மறக்காது"என்ற சொற்களை சிறுவன் அஞ்சல் அட்டையில் எழுதினான். பின் சிவப்பிலை ஒன்றை அஞ்சல் உறையில் வைத்து கொண்டு தீபத்தை பார்த்தபோது 11 நாட்கள் பற்றியெரிந்த பாராலிம்பிக் தீ அணைக்கப்பட்டது.
கடந்த 11 நாட்களில், உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த 4000க்கும் அதிகமான மாற்று திறனுடைய விளையாட்டு வீரர்கள் 20 விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, 471 தங்கப் பதக்கங்களைத் தட்டிச்சென்றனர். அவர்கள் தனது நடைமுறை நடவடிக்கைகள் மூலம், விஞ்சும் தன்மை, ஒருமைப்பாடு, பகிர்தல் ஆகியவை படைத்த பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் கருத்தை வெளிப்படுத்தினர்.
1 2 3 4
|