• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-17 21:23:20    
பெய்ஜிங் 2008 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா சிறப்பு நிகழ்ச்சி அ

cri

வானம் என்ற பாடலை விழிப்புலனற்ற பாடகி யாங் ஹாய் டோ துவக்க விழாவில் பாடினார். இப்பாடல் வரியில் சொன்னது போல், பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், மாற்று திறனுடையோர்களும் சாதாரண மக்களும் இணக்கமாக ஒத்துழைத்தனர். விழிப்புலனற்றோருக்கான ஜுடோ போட்டியில், தொண்டர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோரின் கைகளே, விளையாட்டு வீரர்களின் கண்களைப் போல் துணை புரிந்து போட்டியை நிறைவேற்ற அவர்களுக்கு உதவி செய்தன.

மாற்று திறனுடையோரைப் பொறுத்த வரை, விளையாட்டுக்கள் அவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் புகழையும் கொண்டு வருவதுடன், அவர்களுக்கு துணிவு நம்பிக்கை முதலியவற்றையும் வழங்குகின்றன. இவ்வாண்டின் மே திங்களில், Nargis எனும் கடும் புயல் காற்று மியன்மாரைத் தாக்கியது. வீரர் Winn Niangஇன் 10க்கு மேற்பட்ட குடும்பத்தினர் சீற்றத்தில் பலியாயினர். அவரும் இதில் காயமடைந்தார். பல்வகை இன்னல்களைச் சமாளித்து, பெய்ஜிங் வந்து போட்டியில் கலந்து கொண்டார். ஏனென்றால், விளையாட்டுக்களிலிருந்து தாம் துணிவு பெற்றார் என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது

நான் அதிருஷ்டசாலி. விளையாட்டுக்களிலிருந்து எண்ணற்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் பெற்றேன். எனக்கு வாழ்க்கையைத் தொடரும் துணிவை அவை வழங்கின. போட்டியில் கலந்து கொள்ள முடிந்தால், தொடர்ந்து பயிற்சி செய்வேன் என்றார் அவர்.

7 ஆண்டுகளுக்கு முன், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக சேர்த்து நடத்தும் என்ற வாக்குறுதியை பெய்ஜிங் மாநகரம் உலகிற்கு வழங்கியது. இப்போது, சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் பிலிப் கிரேவன் இவ்வாறு மதிப்பிட்டார்,

இந்தப் போட்டி, பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரலாற்றிலான ஒரு மைல் கல்லாகும். இது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம் என்றார் அவர்.

பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக, பெய்ஜிங் அரசு, பல அடிப்படை வசதி மற்றும் மாற்று திறனுடையோருக்கான சிறப்பு வசதிகளின் கட்டுமானத்தில் அதிக பணிகளை மேற்கொண்டது. எடுத்துக்காட்டாக, சுரங்க தொடர்வண்டி நிறுத்தங்களில், நடக்க இயலாதவர்களுக்கான சிறப்பு மின் தூக்கிகள் பொருத்தப்பட்டன. தடையின்றி செல்வதற்கான குறிப்புகள் அதிகரிக்கப்பட்டன. முக்கிய மருத்துவமனைகளிலும், ஹோட்டல்களிலும் மாற்று திறனுடையோருக்கான தடையற்ற சிறப்பு வழிகள் மேம்படுத்தப்பட்டன. 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 17 இலட்சம் தன்னார்வ தொண்டர்கள் உளப்பூர்வமாக மாற்று திறனுடையோருக்கு சேவை புரிந்தனர். இவையாவும் ஒவ்வொரு துறைகளிலும், விஞ்சும் தன்மை, ஒருமைப்பாடு, பகிர்தல் ஆகிய 3 கருத்துக்களை நடைமுறைப்படுத்த பெய்ஜிங் மாநகரம் மேற்கொண்ட முயற்சிகளை காட்டுகின்றன.

சர்வதேசப் பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் பிலிபு கிரேவன் கூறியதாவது

பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான வசதிகள் அனைத்தும், சர்வதேசப் பாராலிம்பிக் கமிட்டியின் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றின. ஏன், எங்களது கோரிக்கையை தாண்டியுள்ளன. பாராலிம்பிக் கிராமத்துக்குச் சென்று, விளையாட்டு வீரர்களுடன் பேசினால், சிறப்பு வசதிகள், உணவுப் பொருட்கள், போக்குவரத்து ஆகியவற்றின் மீது அவர்கள் மிகவும் மனநிறைவு அடைந்தனர் என்பதைக் கண்டறியலாம் என்றார் அவர்.


1 2 3 4