அலுமினிய தொழில் பற்றி பேசும் போது, அதிக எரியாற்றல் செலவு, கடும் மாசுபாடு முதலியவை தான், நமது நினைவுக்கும் வருகின்றன. ஆனால், மிக பெரிய உலோக தொழில் நிறுவனமான சீன அலுமினிய தொழில் நிறுவனம், உற்பத்தி கட்டமைப்பு சீர்செய்தல், தொழில் நுட்ப புத்தாக்கம் முதலியவை மூலம், எரியாற்றச் செலவைக் குறைத்துள்ளது. அது, பன்நோக்கத்தில் மூலவளத்தைப் பயன்படுத்தி, மாசுபாட்டு வெளியேற்றத்தைக் குறைத்தது. இப்போது, அதன் மாசுபாடு குறைந்த அலுமினிய தொழில் முறையைப் பார்க்கின்றோம்.
சீன அலுமினிய தொழில் நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு, 20 ஆயிரம் கோடி யுவானை தாண்டியது. இது உலகின் இரண்டாவது பெரிய அலுமினிய தொழில் நிறுவனமாகும்.
தொடரவல்ல வளர்ச்சியை நிலைநிறுத்தும் வகையில், உற்பத்தி கட்டமைப்பு சரிப்படுத்தப்பட வேண்டும். இத்தொழில் நிறுவனம், அதிக எரியாற்றல் செலவு மற்றும் அதிக மாசுபாடு கொள்கின்ற சில உற்பத்தி பிரிவுகளை மூடியது. பின்பு, உற்பத்திப் பொருட்களின் கட்டமைப்பைச் சரிப்படுத்தி, மேலதிக மதிப்புடைய வணிகப் பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்தது. பொருட்களிலான வேலைபாடுகளின் சீர்திருத்தத்தையும் முன்னேற்றியது. தவிரவும், புதுப்பிக்க வல்ல அலுமினிய மறு சுழற்சி திட்டங்களை மேற்கொண்டது. இது குறித்து, இத்தொழில் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ao hong கூறியதாவது,
நாங்கள், சிங்தாவ் நகரில் இரண்டு இலட்சம் டன் அளவிலான புதுப்பிக்க வல்ல அலுமினிய உற்பத்தித் திட்டத்தை நிறுவினோம். குவாங்துங் மாநிலத்தின் நான்ஹெய்யில் அலுமினிய கலப்புலோக உற்பத்தித் திட்டத்தை நிறுவினோம். அதுவும், அலுமினிய மறுசுழற்சி செய்கின்ற திட்டப்பணியாகும். உற்பத்திப் பொருட்கள் மற்றும் தொழிலின் கட்டமைப்பு சரிப்படுத்தி வலுப்படுத்துவதே இவற்றின் ஒரே நோக்கமாகும் என்றார் அவர்.
1 2 3 4
|