• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-13 17:12:19    
சீனாவின் அலுமினிய தொழில் நிறுவனத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு

cri

சுற்றுச்சூழலின் மேம்பாட்டிலிருந்து, மாசுபாட்டுக் குறைப்பின் நலனை உணர முடிவதாக சீன அலுமினிய தொழில் நிறுவனத்தின் பணியாளர்கள் தெரிவித்தனர். Chen jun என்ற பணியாளர் கூறியதாவது,

முன்பு, எங்கள் பணி களரிகளில், அடுப்புகளிலிருந்து வெளியேறுகின்ற புகை நிறைந்திருக்கும். தற்போது, பணி களரிகள் தூய்மையானதாகவும் ஒளிமயமானதாகவும் உள்ளன. எங்கள் பணிச் சூழலும் பெரிதும் மேம்பட்டுள்ளது.

2001ம் ஆண்டு முதல் இதுவரை,

எங்கள் தொழில் நிறுவனத்தின் சராசரி எரியாற்றல் செலவு 21 விழுக்காடு குறைந்துள்ளது. மொத்தமாக 36 இலட்சம் டன் நிலக்கரியைச் சிக்கனப்படுத்தியுள்ளது. தற்போது, நாங்கள் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் புதிய குறிக்கோளை முன்வைத்துள்ளோம்ம். அதாவது, 2010ம் ஆண்டுக்குள், மாசுப்பாடு இல்லாத அலுமினிய தொழிலை உருவாக்குவோம். இது பற்றி, அவர் கூறியதாவது,

நாங்கள் மூலவளத்தைச் சிக்கனப்படுத்தி, மாசுப்பாடில்லாத அலுமினிய தொழிலை உருவாக்கும் குறிக்கோளை முன்வைத்துள்ளோம். 2005ம் ஆண்டை விட, 2010ம் ஆண்டுக்குள் கந்தக வாயுவின் வெளியேற்றம் 10 விழுக்காடு குறைக்கப்படும். எரியாற்றல் செலவு 20 விழுக்காடு குறையும். தொழிற்துறை கழிவுப் பொருட்களைப் பன்நோக்கத்தில் பயன்படுத்தும் விகிதம் 5 விழுக்காடு அதிகரிக்கும். இவையெல்லாம் எங்கள் குறிக்கோள்களாகும் என்றார் அவர்.


1 2 3 4