எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில், அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத்திற்கு, இத்தொழில் நிறுவனம் முன்னுரிமை கொடுத்தது. 2001ம் ஆண்டு முதல் இது வரை, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் ஆராய்ச்சித் திட்டங்களில் 680 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. அலுமினிய சுரங்கத்தின் அகழ்வு, உருக்காலை, கழிவு நீர் மற்றும் பொருட்களின் பன்நோக்க பயன்பாடு முதலிய பல்வகை பணி செயல்முறைகள் உருவாகியுள்ளன. இவையெல்லாம், முழுமையான, உலகில் முன்னேறிய நிலையிலான, தற்சார்பு அறிவு சார் சொத்துரிமை வாய்ந்த உற்பத்தி வேலைப்பாடுகளாகும். இது குறித்து, இத்தொழில் நிறுவனத்தின் பொது மேலாளர் xiao yaqing கூறியதாவது,
அறிவியல் தொழில் நுட்பத்திலான முதலீடு, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் அடிப்படை நடவடிக்கைகளில் ஒன்றாகும். இதுவும், ஒரு பயனுள்ள, நீண்டகாலமான அடிப்படை நடவடிக்கையாகும்.
1 2 3 4
|