|
ஒலிம்பிக் தொடக்க விழா தொழில் நுட்பம்
cri
|
 2008 ஆம் ஆண்டு எட்டாம் திங்கள் ஆகஸ்ட் 8ஆம் நாள் இரவு 8 மணி 8 வது நிமிடம் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா எப்படி இருக்கும் என்பது உலகமே எதிர்பார்த்திருந்த மாபெரும் விடயமாகும். ஐயாயிரம் ஆண்டு கால வரலாற்றை கொண்டுள்ள சீனா அதனை எப்படி உலகிற்கு அர்ப்பணித்தது? LED எனப்படும் ஒளி உமிழ் கருவிகளால் உருவாக்கப்பட்ட மிக பெரிய திரைகள் பிரமாண்டமான நிகழ்ச்சிகளுக்கு உயிரோட்டம் தந்தன. கண்கவர் ஒளி மற்றும் பல வண்ண ஒளிப்பட காட்சி அமைப்புக்கள் நிகழ்ச்சிகளை மெருகூட்டின. சர்வதேச அரங்கில் விளையாட்டுத் துறையில் இதுவரை நடைபெற்ற தொடக்க விழாக்களுக்கொல்லாம் தலைசிறந்ததாகவும், முத்தாய்ப்பாகவும் அமைந்த பெய்ஜிங் ஒலிம்பிக் தொடக்க விழாவை உலகமே கண்டுகளித்தது. இவையனைத்தின் மூலம் சீனா உலகிற்கு தனது வளர்ச்சியை, மிகவும் உயர்வான தொழில் நுட்பநிலையை அறிமுகப்படுத்தியுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டிற்கான சீன மக்களது முயற்சிகள், கடுமையான உழைப்பு, ஆயத்தப்பணிகள், வரலாறு, பண்பாடு மற்றும் உலக தரத்திற்கு ஒத்ததான உயர் தொழில்நுட்பங்களின் அறிமுகமாகவும் அவை அமைந்திருந்தன. அதில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்கள் பற்றி சில தகவல்கள் உங்களுக்காக. 1 2 3 4
|
|