• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-20 20:11:35    
ஒலிம்பிக் தொடக்க விழா தொழில் நுட்பம்

cri

உலகிலேயே மிக பெரிய திரைகளில் ஒன்றான, 147 மீட்டர் நீளமும் 22 மீட்டர் அகலமும் கொண்ட LED திரை, தேசிய அரங்கான பறவைக்கூட்டிற்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு 36 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட மேலேழும்பபி கீழிறங்கக்கூடிய 11 மேடைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் முதலாவது இசை நிகழ்ச்சி சீனாவின் பழங்கால பாரம்பரிய ஆடை அணிந்திருந்த 2008 இசை கலைஞர்கள் போஃ எனும் சீன மேள கருவியை அடித்து அதிர வைத்து நடத்திய நிகழ்ச்சியாகும். சீனப் பண்பாட்டு அம்சங்கள் நிறைந்து இருந்த இவ்விழாவில், சீனாவின் இசை நாடகத்தின் தாய் என்று அழைக்கப்படுகின்ற 600 ஆண்டு வரலாறு கொண்ட குன் சியூ இசை நாடகம் இவ்விழாவில் அரங்கேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து, 20 மீட்டர் நீளமுடைய பெரியதொரு ஓவியச்சுருள் போன்ற அமைப்பில் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. 800 கிலோ எடையுடன் எண்ணியல் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளோடு அது உருவாக்கப்பட்டிருந்தது. கணினி தொழில் நுட்பங்களோடு சீனாவின் கண்டுப்பிடிப்புகளான தாள் மற்றும் அச்சு தொழில் நுட்பத்தை நினைவூட்டுவதாக அது அமைந்திருந்தது. சீன எழுத்துக்கள் மேலெழும்பி கிழே பதியும் முறையை மிக சிறப்பாக படைத்துக்காட்டி, அனைவரையும் வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது. பின்னர் சீனாவின் கண்டுபிடிப்பான திசைக்காட்டும் கருவியை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக ஆழ்கடலில் அசைந்தாடும் கப்பலில் திசையறியும் பயணியை பார்த்த இரசிகர்களுக்கு, தொடர்ந்து சீன மண்ணின் அனைத்து போர் மற்றும் தற்காப்பு கலைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

1 2 3 4