• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-20 20:11:35    
ஒலிம்பிக் தொடக்க விழா தொழில் நுட்பம்

cri

இது மட்டுமல்ல, பெய்ஜிங் தொடக்கவிழா தொழில் நுட்பக் குழுவிற்கு இயக்குனரான Yu Jianping தொடக்கவிழா நிகழ்ச்சியின் பலப்பகுதிகளில் நவீன தொழில் நுட்பங்களை சுய முயற்சியால் அறிமுகப்படுத்தினார். பிரமாண்டமான LED திரை மற்றும் மேலெழுந்து கீழிறங்கும் மேடைகள் தவிர, உலகை சுட்டிக்காட்டும் விதமாக, நிகழ்ச்சியின் இறுதியில் மேலேழுந்து நின்ற பெரிய உலக உருண்டை இன்னொரு தொழில் நுட்ப சிறப்பாகும். 18 மீட்டர் விட்டமும், ஏறக்குறைய 16 டன் எடையும் கொண்ட அந்த உலக உருண்டை 24 மீட்டர் உயரம் கொண்டிருந்தது. 58 நடிகர்கள் அதை சுற்றி இடுப்பில் கட்டியிருந்த கம்பியின் துணையோடு, நிகழ்ச்சி அரங்கேற்றம் செய்தனர். பாதிபேர் சற்றுநேரம் தலைகீழாக நின்றனர் என்பது குறிப்பிடதக்கது. சீனாவில் இத்தகைய மிக பெரிய உலக உருண்டை பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. அதன் மேலே நின்று கொண்டு தான் நானும் நீயும் என்ற ஒலிம்பிக் தலைப்பு பாடலை, சீனாவின் புகழ்பெற்ற பாடகர் Liu Huan னும் பிரிட்டன் பாடகி Sarah Brightman னும் பாடினர். ஓர் உலகம் ஒரு கனவு என்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கின் முழக்கத்தை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.

விண்வெளி வீரர் ஒருவர் வானத்தில் பறந்து வந்த காட்சி சீனாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தை குறிப்பதாக அமைந்தது. இவ்வாண்டு இறுதியில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் சீனாவின் ஆய்வுப் பயணத்திட்டத்தையும் அது நினைவுப்படுத்தியது. இந்நிகழ்ச்சிகள் எல்லாம் ஒத்திகை நடத்தப்பட்டு தொடக்கவிழா எத்தகைய உள்ளடக்கங்களை கொண்டிருக்கும் என்பதை சிலர் அறிந்திருந்தனர். ஆனால் இறுதியாக ஒலிம்பிக் தீபம் எப்படி ஏற்றப்படும் என்பது எவருக்கும் தெரியமால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஒலிம்பிக் தீபம் பறவைக்கூட்டை சுற்றிக்கொண்டு வரப்பட்ட பின் சீருடற்பயிற்சி விளையாட்டில் அரசன் என்று போற்றப்படுகின்ற Li Ning அவர்களிடம் வழங்கப்பட்டவுடன், கட்டப்பட்டிருந்த கம்பிகளால் அவா மேலே உயர்ந்தப்பட்டார். பறவைக்கூட்டின் மேல்புற திறப்பிற்கு உள்ளயுள்ள சுற்றுப்பகுதியில் ஒலிம்பிக் தீபம் பல்வேறு பகுதியில் கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் திரை போல் விரிய அவர் தீபம் கொண்டு ஓடிய பாவனையில் பவனி வந்தார். தீபக்கலசம் இருந்த இடத்தில் அவர் வந்து நின்றவுடன் மக்கள் அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்ய ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

சுருங்க சொன்னால், ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நேற்று இன்று மற்றும் நாளைய சீனாவை உலகிற்கு எடுத்து காட்டுவதாக அமைந்தது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து ஏறக்குறைய இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் ஒளியால் மின்னிய ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்கள், பதாகையில் வரையப்பட்டது போல மேலெழுப்பப்பட்ட காட்சி எனது மனக்கண்களில் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கிறது.


1 2 3 4