
பெய்ஜிங் ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சியில் வரலாற்றிலேயே மிகவும் சில கடினமான நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. முன்னேறிய தொழில் நுட்பங்களோடு அருமையாக ஒன்றிணைந்த சிறந்த படைப்பாற்றல் நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் தொடக்கவிழா தொழில நுட்பக் குழுவின் இயக்குனர் Yu Jianping கூறினார்.
சீனாவின் கண்டுபிடிப்புகளான வெடிமருந்து, தாள், அச்சு தொழில் நுட்பம், திசை காட்டும் கருவி, குடை ஆகியவற்றையும் பல்வேறு பண்பாட்டு பதிவுகளையும் நினைவூட்டுகின்ற அம்சங்கள் தொடக்கவிழாவில் தலைசிறந்த படைப்பாற்றலின் மூலம் வெளிப்படுத்தப்பட்டன. தியன் ஆன் மென் சதுக்கத்திலிருந்து அணிவகுத்து தேசிய விளையாட்டு அரங்கான பறவைக்கூட்டிற்கு செல்வதுபோல கால்தட வடிவில் அமைந்த வானவேடிக்கை நிகழ்ச்சியின் துவக்கமாக அமைந்தது. 29 வது கோடைகால ஒலிம்பிக் போட்டியை குறிக்கும் வகையில் கால்தட வடிவில் அமைந்த 29 வானவேடிக்கைகள் தியன் ஆன் மென் சதுக்கத்திலிருந்து பறவைக்கூடு வரை வெடித்தன. வெடிமருந்து கண்டுபிடிப்பில் முன்னேறிய தொழில்நுட்பங்களை உணர்த்துவதாக இது அமைந்தது.
1 2 3 4
|