செ ச்சியாங் மாநிலம் சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. அங்கு ஒரு உயர் வேளாண் அறிவியல் தொழில் நுட்ப மாதிரி மண்டலம் உள்ளது. இந்த மண்டலத்தில், வேளாண் பொருட்களின் வளர்ச்சி கணினியால் கண்காணிக்கப்படுகிறது. மழை நீர் பயன் தரும் முறையில் சேரிக்கப்பட்டு பயிர்கள் மேல் தெளிக்கப்படுகின்றது. அரிய தாவரங்கள் குளோனிங் என்ற படியெடுப்பு முறையில் பாதுகாக்கப்பட்டு சீராக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் எங்களுடன் சேர்ந்து இந்த மண்டலத்தில் பயணம் செய்து வேளாண் அறிவியல் தொழில் நுட்ப மாதிரி மண்டலத்தைப் பற்றி அதிகம் அறியவாருங்கள்.

3 ஹெக்டர் நிலப்பரப்புடைய ஒரு பெரிய கன்றுகளை வளர்க்கும் வெப்ப அறையில், உயர் வேக தன்னியங்கி விதைப்பு உற்பத்தி அமைப்பு மூலம், 3 வினாடிகளுக்குள் ஒரு பயிர் விதைக்கப்படலாம். குறிப்பாக, இந்த வெப்ப அறையில், மண் காணப்படவில்லை. ஒவ்வொரு தாவரத்தின் அடியிலும், ஒரு ஊசி போடப்பட்டது. கணினி மூலமான பாசன தொகுதி வழங்கும் சத்து நீரால் அவை பாசனம் செய்யப்படுகின்றன. பணியாளர் gu shen yan கூறியதாவது,
இங்கே வெப்பம், ஈரப்பதம், காற்று அளவு முதலியவை கணினி மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. வெப்ப அறை ஒன்றுக்கு, ஓரிரு பணியாளர்கள் மட்டுமே தேவைப்படுகின்றனர். ஏனைய பணிகள் அனைத்தும் கணினி மூலம் மேற்கொள்ளப்படலாம் என்றார் அவர்.
1 2 3 4
|