
இருந்த போதிலும், இந்த மண்டலம் மேலும் பெரும் வளர்ச்சி திட்டத்தை வகுத்துள்ளது. zhu xiao xiang மேலும் கூறியதாவது
விவசாயிகளுக்கு என்ன தேவைப்படுகின்றது? சேவை தான். அவர்களுக்கு புதிய தாவர வகைகளையும், தொழில் நுட்பச் சேவைகளையும் வழங்க வேண்டும். நிர்வாக வழிமுறையை வழங்கும் அதேவேளையில், கடன் தொகையையும் வழங்க வேண்டும். இது தொழிலை முழுமையான அளவில் தொடர செய்யும் ஒரு வகை சேவை ஆகும் என்றார் அவர்.
இதற்காக, அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில், சென் ச்சியாங் உயர் வேளாண் அறிவியல் தொழில் நுட்ப மண்டலத்தில் ஒரு பெரிய ரக வேளாண் அறிவியல் நகரம் கட்டியமைக்கப்படவுள்ளது. அப்போது, அறிவியல் தொழில் நுட்பம் செ ச்சியாங் மாநிலத்தின் வேளாண் துறையின் வளர்ச்சிக்கும் மேலும் பெரும் ஆதரவான பங்காற்றும் என்று நம்புகின்றோம்.
நேயர்கள் இதுவரை, செ ச்சியாங் மாநிலத்திலுள்ள உயர் வேளாண் அறிவியல் தொழில் நுட்ப மாதிரி மண்டலம் பற்றி கேட்டீர்கள். 1 2 3 4
|