
மண் இல்லாத நிலையில் வளர்க்கப்பட்ட வேளாண் பொருட்களின் விளைச்சல், பாரம்பரிய வழிமுறைகள் மூலம் கிடைத்ததை விட பல மடங்கு அதிகமானது. எடுத்துக்காட்டாக, ஒரு சதுர மீட்டரில் குறைந்தது 46 கிலோ தக்காளிப்பழங்கள் உற்பத்தியாகின்றன. சாதாரண தோட்டத்தில் கிடைப்பதை விட இது சுமார் நூறு மடங்கு அதிகமாகும்.
Gu shen yan மேலும் கூறியதாவது
தரைக்கடியிலுள்ள இந்த இரும்பு குழாய், வெப்பம் வசதியாகும். அருகிலுள்ள ஒரு மின்னாற்றல் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு வெப்ப காற்று, குழாய் மூலம் இந்த அறையின் வெப்பத்தை அதிகரிக்கலாம். இதனால் நிலக்கரியைச் சிக்கனப்படுத்தலாம், சுற்றுசூழலைப் பாதுகாக்கலாம் என்றார் அவர்.
தவிர, இந்த மண்டலம் பல பத்து இலட்சம் யுவான் செலவிடப்பட்டு, ஒரு மழை நீரை மறு சுழற்சி செய்யவும் மற்றும் நீர் விநியோக வசதியையும் அமைத்துள்ளது. தற்போது, இந்த மண்டலத்தில் பூக்கள் மற்றும் பயிர்களின் மீது தெளிக்கப்படும் நீரில் மழை நீர் 70 விழுக்காடு ஆகும்.
1 2 3 4
|