
சென் ச்சியாங் உயர் வேளாண் அறிவியல் தொழில் நுட்ப மாதிரி மண்டலம் 2001ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் நிலப்பரப்பு 330 ஹெக்டராகும். மொத்த முதலீட்டுத் தொகை 50 கோடி யுவானுக்கு மேலாகும். சீன வேளாண் அறிவியல் கழகம், சென் ச்சியாங் பல்கலைக்கழகம், உள்ளிட்ட 20க்கும் அதிகமான அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் இந்த மண்டலத்தில் ஆய்வகங்களை நிறுவியுள்ளன. தவிர, அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து முதலிய வெளிநாடுகளிலிருந்து முன்னேறிய தொழில் நுட்பங்கள் ஈர்க்கப்பட்டுள்ளன.
பல அரிய உயர் விலைவான செடிகொடிகளையும் மலர்களையும் குளோனிங் என்ற படியெடுப்பு முறை மூலம் இங்கே பெரும் அளவாக உற்பத்தி செய்யலாம். இதன் விளைவாக பல விவசாயிகள் உண்மையான நன்மை பெற்றுள்ளனர் என்று இம்ண்டலத்தின் பொறுப்பாளர் zhu xiao xiang கூறினார். அவர் கூறியதாவது
தைவானிலிருந்து 15 முதல் 30 யுவான் என்ற விலை வரை இறக்குமதி செய்யப்பட்ட வணத்துப்பூச்சி வடிவிலான ஒகிட் பூவை நாம் வளர்க்கின்றோம். தற்போது, விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். அதன் விலை 3 முதல் 5 யபவான் வரை மட்டுமே என்றார் அவர்.
தற்போது தாவர குளோனிங் மையத்தில் ஆண்டுதோறும் 3 கோடி அரிய தாவரங்கள் குளோனிங் செய்யப்படுகின்றன என்று zhu xiao xiang கூறினார்.
1 2 3 4
|