 நம்மை நாமே அழகுப்படுத்திக்கொள்வதில் பல மணிநேரங்கள் செலவழிக்கின்றோம். பல்துலக்கி, தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து உடலை சுத்தமாக பாதுகாப்பதோடு, முகம், தலைமுடி மற்றும் கண்ணிமைகள் பேணுதல் என பல்வேறு பணிகள் மூலம் உடலை கட்டுகோப்பாக, அழகாக வைத்துக்கொள்ள விரும்புகி்ன்றோம். குறிப்பாக தலைமுடியை பேணுவது அனைவருமே விரும்பும் ஒன்று. சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு பாணிகளில் முடிவெட்டிக்கொண்டு உலாவருவதும், அதற்காகவே பல நூறு ரூபாயை செலவழிப்பதும் வாடிக்ககையாகி விட்டது. குளிக்கின்றபோது தலைமுடியை பேணுவதற்கென்றே பல உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் சாம்பூ எனப்படும் தலைமுடி வழலை திரவத்தை, போட்டி போட்டு கொண்டு விற்பனை செய்து வருகின்றன. இது போதாது என்று தலைமுடியை மென்மை படுத்துவதற்கென்று கண்டிசனர் எனப்படும் மென்மையாக்கும் வழலை திரவத்தையும் இணைத்து மக்களுக்கு விற்று வருகின்றன. பெரும்பாலாக இவை பற்றிய அடிப்படை குறிப்புகளை கூட தெரிந்து கொள்ளாமலேயே அவற்றை பயன்படுத்தும் மக்கள் தான் அதிகம். 1 2 3 4
|