இந்த புதிய ஆய்வில் தனிசிறப்புமிக்க ஆய்வு முறையை அவர்கள் கையாண்டார்கள். முடியின் மேற்பரப்பில் வரிமம் செய்கிற அணு ஆற்றல் நுண்ணோக்கி தலைமுடிகள் ஒன்றோடென்று தொடும் போது அவற்றிற்கிடையே ஏற்படும் வினைகளை அவர்கள் அளவிட்டுள்ளனர். இத்தகைய ஆய்வுமுறை வேவ்வேறான தலைமுடி நலத்திற்கான உற்பத்திப் பொருட்கள் எவ்வாறு தலைமுடிகளுக்கு இடையிலான தொடர்பை பாதிக்கிறது என அறிவியலளர்கள் கண்டுபிடிக்க உதவி புரியும். இதன் மூலம் அந்த உற்பத்திப் பொருட்களை இன்னும் அதிகமாக இக்காலத்திற்கு ஏற்ற முறையில் ஒழுங்குப் படுத்த முடியும் என்று ஜெர்மெனி Bayreuth பல்கலைக்கழக மாணவரும், ஆய்வின் துணை ஆசிரியையுமான Eva Max தெரிவித்தார். இந்த ஆய்வு, தொடுதலின் அறிவியலை விளக்குவதாக உள்ளது. அதாவது குறிப்பிட்ட முடியில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு ஒட்டு மொத்த பாதிப்பை தலைமுடியிலும், இதர பொருட்களிலும் கொண்டு வருகிறது என்பதை இது விளக்குகிறதாம்.
இந்த ஆய்வில் பரிசோதனைக்கான தலைமுடி மாதிரிகளை தொண்டர்களிடமிருந்து அறிவியலாளர்கள் பெற்றுக்கொண்டார்கள். அவை கறுப்பு மற்றும் பிற மங்கிய நிறங்களை கொண்டிருந்தன. தனிசிறப்பு மிக்க ஆய்வுமுறை மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முடிவுகள் படி இரண்டு காரணங்களால் தலைமுடி வாருவதற்கு கடினமாக இருக்கலாம். முதலாவதாக தலைமுடியின் மேல்மட்டத்தில் ஏற்படும் பழுது. அதாவது தலையில் ஏற்படும் பொடுகு இதர தலைமுடிகளையும் பாதிக்கும். இவ்வாறான நேரத்தில் தலைமுடிகள் ஒன்றோடொன்று விழும்பொது மென்மையான முடிகளை போன்றல்லாமல் அதிக உராய்வை ஏற்படுத்துகின்றன. அதனை மென்மைப்படுத்துவதற்கு இந்த பொடுகுகளை குணப்படுத்தும் அல்லது ஒன்றுமில்லாமல் ஆக்கும் மென்மையாக்கும் வழலை திரவங்கள் வேண்டும்.
அடுத்ததாக தலைமுடிகள் உரசிக்கொள்ளும் போது வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் எதிர்மறையான பாதிப்பு ஏற்பட்டு முடிகளுக்கிடையில் எதிர்வினை ஏற்படுகிறது. இவ்வெதிர்வினையால் உரசல் ஏற்பட்டு, தலைமுடி கோரமாகி தலைவாருவதற்கு கடினமாகிறது. இதனை பண்படுத்துவதற்கு எதிர்மறைப் பாதிப்புகளைக் நீக்கக்கூடிய கூறுகளை மென்மையாக்கும் வழலை திரவத்தில் சேர்க்க வேண்டும்.
1 2 3 4
|