• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-03 12:51:11    
கூந்தல் நலம் பெற

cri

ஆய்வுகள் பல நடந்தாலும் பழுதடைந்துள்ள தலைமுடியை பண்படுத்துவதற்கு சரியான வரையறையை கண்டுபிடிப்பது என்பது எளிதானதல்ல. தலைமுடி பழுதடைவதற்கு தலைமுடிகளுக்கிடையில் ஏற்படும் உரசலோடு, மேலதிக வெளிப்புற காரணிகளும் பங்கு ஆற்றுகின்றன. ஈரப்பதம், முடியிலான நீர் அளவு, முடியின் ஒட்டும் தன்மை ஆகிய அனைத்தும் தலைமுடியின் தரத்தை பாதிக்கின்றன என்று மூத்த அறிவியலாளர் மருத்துவர் Claudia Wood குறிப்பிடுகிறார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தகுந்த வரையறைகளோடு அமைந்த மென்மைப்படுத்தும் வழலை திரவத்தை கண்டுபிடிப்பதே இதற்கு தீர்வாக அமையும் என்று Max மற்றும் அவரது சகாக்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றையெல்லாம் அறிய வரும்போது தலைமுடியை பேணுவது எவ்வளவு முக்கியமானது; சிக்கலானது என்பது தெளிவாகிறது. ஏனோதானோ என்று ஏதாவது ஒரு வழலை அல்லது மென்மையாக்கும் வழலை திரவத்தை பயன்படுத்தாமல் நம்முடைய தலைமுடிக்கு, உடலுக்கு உகந்ததை அறிந்து பயன்படுத்துவது நமது தலைக்கும் தலைமுடிக்கும் ஏன் உடல் நலத்திற்கும் சிறந்ததாக அமையும்.


1 2 3 4