எதற்காக இது போன்ற வழலை திரவம்? தலைமுடி மென்மையாக படிந்து நாம் விரும்பிய வடிவில் அமைந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே இவற்றை எல்லாம் செய்கின்றோம். தலைமுடி சிக்கலாகி வணங்கா முடியாக இருப்பதை பொதுவாக யாரும் விரும்புவதில்லை. தலைமுடியை வைத்து உடன் தோழர்களை கிண்டல் செய்யும் சிறுவர்களும், இளைஞர்களும் பலருண்டு. அதிலும் தலையிலுள்ள வெள்ளை முடி வெளியே தெரிந்து விடக் கூடாது என்று அவற்றை வெட்டிவிடுவது, கறுப்பு சாயம் அடிப்பது என பராமரிப்பு வழிமுறைகள் வளர்ந்து வருகின்றன. இந்நிலையில் மிக மோசமான தலைமுடியை கொண்டதெல்லாம் முற்காலம் என்று சொல்லிவிடுவது தொலைவிலில்லை என்பதை சுருண்ட, சிக்கலான தலைமுடியை பண்படுத்துவதற்கான ஆய்வை நடத்தியுள்ள ஜெர்மனி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தலைமுடியை பண்படுத்துவதற்கான விபரமான நுண்ணிய ஆய்வை முதலாவதாக தாங்கள் மேற்கொண்டுள்ளதாக Bayreuth பல்கலைக்கழக வேதியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தலைமுடிகள் ஒன்றோடென்று சேர்ந்து கொண்டு பின்னிப்பிணைந்து சிக்கி இருக்கின்றபோது ஒவ்வொரு முடியிலும் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு தலையில் உள்ள முடிகள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும்போது ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஆய்வு தலைமுடியை பேணுவதற்காக நாம் பயன்படுத்தும் வழலை திரவம், மென்மையாக்கும் வழலை திரவம் மற்றும் தலைமுடியை பேணுவதற்காக பயன்படுத்தப்படும் எல்லா உற்பத்திப் பொருட்களின் தரத்திலும் முன்னேற்றம் காணப்படுவதற்கு வழிகோலும் என்று அறியப்படுகிறது.
1 2 3 4
|