பள்ளியில் பீக்கிங் இசை நாடக பாடம் ஆ
cri
 மக்களின் பொழுதுபோக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் பல பாரம்பரிய கலை வடிவங்களைப் போல் பீக்கிங் இசை நாடகத்திற்கான ரசிக்கர்களும் குறைந்து வருகின்றனர். வரலாற்றில் இது மிகவும் பரவலாக வரவேற்கப்பட்ட போது, தியேன் சின் மாநகரில் பல பீக்கிங் இசை நாடகக் குழுக்கள் இருந்தன. ஆனால், தற்போது, தியேன் சின் பீக்கிங் இசை நாடக குழு, இளைஞர் பீக்கிங் இசை நாடகக் குழு ஆகியவை மட்டும் உள்ளன. சீன இசை நாடக அரங்கத்தில் மட்டும் பீக்கிங் இசை நாடகங்கள் முறைப்படி வழங்கப்படுகின்றது. மேலும், இந்த இசை நாடகம் பற்றி அறிந்து கொள்வதற்கு, குறிப்பிட்ட சீன மொழி அறிவு மற்றும் வரலாற்று அறிவுகள் தேவைப்படுகின்றன. ஆகையால், இளைஞர்களைப் பொறுத்தவரை இந்த இசை நாடகத்தை ரசிப்பதில் கொஞ்சம் கஷ்டம் உண்டு. 1 2 3 4
|
|