
இது குறித்து பேசுகையில், பீக்கிங் இசை நாடகத்தின் பரவல் பிரச்சினையில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பது இதன் மீதான மக்களின் ஆர்வம் குறைந்து வருவதற்கான காரணமாகும் என்று தியேன் சின் இசை நாடக நிபுணர் liu lian quan கருத்து தெரிவித்தார். துவக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில், தொடர்புடைய பாடத்தை வழங்குவது, உரிய முறையில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கலாம். தற்போது, பல நாடுகளில் தேசிய இன தனிச்சிறப்புமிக்க பண்பாடுகள் பற்றிய பாடங்கள் அடிப்படை கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையில், பீக்கிங் இசை நாடகம் பள்ளி கல்வியில் சேர்க்கப்படுவது தேசிய இன பண்பாட்டின் பரவலுக்குத் துணை புரியும் என்று அவர் கூறினார். liu lian quan கூறியதாவது

பீக்கிங் இசை நாடகம் பள்ளி பாடங்களில் சேர்க்கப்படுவதற்கான காரணம் என்ன? துவக்க மற்றும் இடைநிலை பள்ளி மாணவர்களிடையில், எமது தேசிய இன சிறப்பு பண்பாட்டை அறிந்து கொண்டு மதிப்பு அளிக்கும் இளைஞர்களை வளர்ப்பதாகும். இப்படி செய்தால் தான், எமது தேசிய இன பண்பாடு தலைமுறைதலைமுறையாக பரவல் செய்யப்படும். நாட்டின் ஒன்றிணைப்பு ஆற்றல் வலுப்படுத்தப்படும் என்றார் அவர்.
1 2 3 4
|