
சீனாவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், தியேன் சின் மாநகர இலக்கிய சங்கத்தின் தலைவருமான feng ji cai இன் பார்வையில், துவக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் பீக்கிங் இசை நாடக பாடத்தை வழங்குவது ஒரு நல்ல செயலாகும். ஆனால், இதை தவிர, சீனாவில் பல்வேறு இடங்களில் சொந்த தனிச்சிறப்புடைய உள்ளூர் கலை வடிவங்களையும் பாதுகாத்து, மேலும் அதிகமான தேசிய இன கலைகள் பற்றிய பாடங்களை பள்ளிப் பாடங்களில் சேர்க்க வேண்டும் என்று அவர் கருதுகின்றார். அவர் கூறியதாவது
பீக்கிங் இசை நாடகம் சீனாவில் பொருள் சாரா பண்பாட்டு மரபு செல்வங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. பள்ளிகளில் இது பற்றிய பாடம் வழங்குவதை ஆதரிக்கின்றேன். அதேவேளையில், பல்வேறு இடங்களின் உள்ளூர் கலைகளையும் முழுமையாக பாதுகாத்து பரவல் செய்ய வேண்டும். இசை, நுண்கலை, நடனம் முதலியவை அவற்றில் அடங்கும் என்றார் அவர். 1 2 3 4
|