• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-06 10:49:41    
பட்டுப் பாதையின் உருவாக்கப் பின்னணி

cri

பட்டுப் பாதையை பயன்படுத்தி பண்டைய சீனாவுக்கும் அப்போதைய மேலை நாடுகளுக்குமிடையிலான நாகரிக பரிமாற்றத்தை வர்ணிப்பது ஜெர்மனில் புகழ் பெற்ற புவியியல் அறிஞர் சிஹோட்பஃன் லீ 1877ம் ஆண்டு இயற்றிய "சீனா"என்னும் நூலில் முதல்முறையாக விவரித்தார். பட்டுப்பாதை என்ற பெயர் நடைமுறைக்கு ஒத்தது மட்டுமல்ல இலக்கிய கல்வியியல் வட்டாரத்தால் விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு உலகெங்கும் பரவியுள்ளது. பண்டைகால சீனரின் பார்வையில் குறிப்பிட்ட மேலை நாடுகள் யாவை? பாமீர் பீடபூமி, ரோம் ஏகாதிபத்தியம், இந்தியா, மலாக்கா நீரிணை, பாரசீகக் வளை குடா, செங்கடல் மற்றும் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் பண்டைகால சீன மக்களால் மேலை நாடுகளாக அழைக்கப்பட்டன. மேற்கு ஹென் வம்சகாலத்தில் ஹென் பேரரசரின் கட்டளையை ஏற்றுக் கொண்டு தூதாண்மை அதிகாரி ச்சான் சியேன் பாமீர் பீடபூமியில் தூதாண்மை பயணம் மேற்கொண்டார். கிழக்கு ஹென் வம்சகாலத்தில் தூதாண்மை அதிகாரி கேன் யிங் பண்டைய ரோம் ஏகாதிபதியத்தில் பயணம் செய்தார். தாங் வம்சகாலத்தில் புகழ் பெற்ற புத்த மத பெரியார் சியூன்ச்சான் இந்தியாவில் மத திருப்பயணம் செய்து புத்த மதத் திருமறை நூல்களை கொண்டு நாடு திரும்பினார். மிங் வம்சகாலத்தின் துவக்கத்தில் ச்சுன் ஹு 7 முறை மலாக்கா நீரிணை, பாரசீகக் வளை குடா, செங்கடல், ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் முதலிய இடங்களில் பயணம் செய்தார். கீழை நாடான சீனாவுக்கும் மேலை நாடுகளுக்குமிடையிலான பண்பாட்டுப் பரிமாற்ற முயற்சியாக கருத்தப்பட்ட பட்டுப் பாதை உலகின் பல்வேறு இடங்களுக்கு சீன தேசத்தின் நாகரிகத்தை விளம்பரம் செய்துள்ளது.
1 2 3 4