• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-06 10:49:41    
பட்டுப் பாதையின் உருவாக்கப் பின்னணி

cri

துவக்கத்தில் பட்டுப் பாதை சீனாவின் சான் ஆன் நகரிலிருந்து தொடங்கி ஆசியாவுக்கு ஊடாக சென்று ஆப்பிரிக்கா ஐரோப்பா ஆகியவற்றை இணைத்தது. இது தரை வழி பட்டுப் பாதையாக கருதப்பட்டது. பின்னர் பாலைவன பாதை, புல்வெளி பாதை, துருபான் பாதை, கடல் பாதை முதலிய பெயர்களில் பட்டுப் பாதை வர்ணிக்கப்பட்டது. பட்டுப் பாதையின் அம்சங்கள் விரிவாக்கப்பட்டு கீழை மற்றும் மேலை நாடுகளுக்கிடையில் அரசியல் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்ற பாலமாக கருதப்பட்டது. இப்போது பட்டுப் பாதை பற்றி குறிப்பிடும் போதெல்லாம் கீழை மற்றும் மேலை நாடுகளிடையிலான பண்பாட்டுப் பரிமாற்றத்தையே மக்கள் இயல்பாக கருதுகின்றனர்.

இப்போது பட்டுப் பாதைக்கும் சீனத் தேசத்தின் நாகரிகத்திற்குமிடையிலான தொடர்பு பற்றி பார்ப்போமா?

முதலாவதாக பண்டைய சீனாவின் முக்கிய பொருளியல் பண்பாட்டில் காணப்படும் பட்டுத் துணி தொழில், பிங்கான், தேயிலை, கைவினைப் பொருட்கள், தாள் உற்பத்தி நுட்பம், அச்சு தொழில் நுட்பம், திசை காட்டும் கருவி, வெடி மருந்து உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் பட்டுப் பாதை மூலம் மேலை நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

இரண்டாவதாக, சீன வரலாறு பதிவேட்டின் படி, ஹென் வம்சகாலத்தில் ஆண்டொன்றுக்கு பத்துக்கு மேலான தூதாண்மை பிரதிநிதி குழுக்கள் வெளிநாடுகளில் பயணம் செய்யும் போது பெருமளவிலான பட்டுத் துணிகளைக் கொண்டு சென்றன. நாடு திரும்பிய போது வெளிநாடுகளிலிருந்து பல்வகை அற்புதமான பொருட்களைக் கொண்டு வந்தன. ஹென் வம்சகாலத்தில் கீழை மற்றும் மேலை நாடுகளின் பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றம் உயர் நிலைக்கு வளர்ந்தது. பட்டுப் பாதையை பாதுகாக்கும் வகையில் ஹென் பேரரசர்கள் பட்டுப் பாதை வழியில் பல நிர்வாக பிரதேசங்களை நிறுவினர். பட்டுப் பாதை தடையின்றி வளர்வதற்கும் கீழை மற்றும் மேலை நாடுகளிடை அமைதியான பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கும் இந்த நிர்வாக பிரதேசங்கள் உத்தரவாதம் அளித்தன.

1 2 3 4