
நான்காவதாக, இப்பாதை அமைதியான பண்பாட்டுப் பரிமாற்றம் பரஸ்பர வெற்றி பெறுவதற்கு துணை புரிந்துள்ளது. சீனா ஏற்றுமதி செய்த பட்டுத் துணிகள் மற்றும் பிங்கான் பொருட்களை பார்த்தால் சீன மற்றும் வெளிநாட்டு பண்பாடுகள் பரஸ்பரம் செல்வாக்கு பெற்றுள்ள அறிக்குறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் படங்களை சீனப் பட்டுத் துணியிலும் பீங்கான் பொருட்களிலும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பட்டுத் துணிப் பொருட்கள் சீன சந்தையில் விற்கப்பட்டன. ஆனால் அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. மேலை நாட்டு மக்களின் விருப்பத்துக்கேற்ப இந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. வெளிநாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்த பட்டுத் துணிகளிலும் பீங்கான் பொருட்களிலும், பறவை மற்றும் விலங்குகள் போன்ற வடிவம் காணப்பட்டன. பீங்கான் பொருட்கள் சீனாவின் தான் வம்சகாலத்தின் மத்திய மற்றும் பிற்காலங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களாகும். மேற்காசிய பாணியுடைய படங்கள் பீங்கான் பொருட்களின் மேல் விரையப்பட்டதன. அப்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பீங்கான் பொருட்களும் ஓவியங்களும் அதேமாதிரி வடிவத்தில் தயாரிக்கப்பட்டன. 18வது நூற்றாண்டு காலத்தில் சீனாவின் தென் கடலோரத்தில் ஐரோப்பிய சந்தையை விரிவாக்கும் வகையில் ஐரோப்பிய பாணியுடைய பீங்கான் பொருட்களும் ஓவியங்களும் தயாரிக்கப்பட்டன. அவை வெளிநாடுகளுக்கு முக்கியமாக ஏற்றுமதி செய்யப்பட்டாலும் அந்த மேலை நாட்டு பாணி பண்பாடு மறைமுகமாக சீனப் பண்பாட்டு கலையை பாதித்துள்ளது என்று தொல் பொருள் ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 1 2 3 4
|