• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Saturday    Apr 12th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-07 22:12:20    
திபெத்திற்கான மருத்துவ உதவி

cri

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் bu ren மாவட்டத்தின் மக்கள் தொகை, 30 ஆயிரமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இம்மாவட்டத்தில், இயற்கை நிலைமை, மிகவும் கடுமையானது. இங்கு, வெள்ளப்பெருக்கு, மண் அரிப்பு, நிலச் சரிவு, நிலநடுக்கம், வறட்சி முதலிய இயற்கைச் சீற்றங்கள், அடிக்கடி நிகழ்கின்றன.

இவ்வாண்டின் பிப்ரவரி திங்களில், hei longjiang மாநிலத்தின் qi taihe நகரின் மக்கள் மருத்துவமனை இம்மாவட்டத்துக்கு ஒரு மருநத்துவ குழுவை அனுப்பியது. அறுவை சிகிச்சைத் துறையின் துணை இயக்குநர் si congmei, மயக்க மருந்து நிபுணர் wei xiaowen, செவிலியர் qu lihui ஆகியோர் அடங்கிய இம்மருத்துவ உதவிக் குழு, bu ren மாவட்டத்தில், அரையாண்டு காலம் நீடித்த திபெத்திற்கான தொழில் நுட்ப உதவி நடவடிக்கையை மேற்கொண்டது. இக்குழு, bu ren மாவட்ட மக்கள் மருத்துவமனைக்கு வந்த சிறிது காலத்திற்குப் பின், மகப்பேற்று சிக்கலுடன் Drolma என்ற கர்ப்பிணிப் பெண், மருத்துவமனைக்கு வந்தார். ஆலோசனைக்கு பின் அந்த பெண்ணுக்கு உடனடி அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் குழந்தையை வெளியே எடுக்கலாம் என்று மருத்துவக்குழு தீர்மானித்தது. அறுவை சிகிச்சையறைக்கு வெளியே காத்திருந்தவர்கள், திபெத் மொழியில் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். மேலை நாட்டு மருத்துவத்தின் மீதான கவலையும், சந்தேகமும் அவர்கள் மனதில் தீவிரமாக இருந்தது.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040