
செழுமையான அனுபவம் கொண்ட மயக்க மருந்து நிபுணர் wei xiaowen கூறியதாவது
பீடபூமியில் வாழ்ந்த மக்களின் உடல், மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது. எனவே, நாம், அவர்களுக்கு மருந்துகளை கவனத்துடன் வழங்குகின்றோம்.
நீண்டகால மருத்துவர்கள் மற்றும் மருந்து பற்றாக்குறையால், திபெத்திற்கான மருத்துவ உதவிக் குழுவின் வருகை, bu ren மாவட்டத்தில், திபெத் மக்கள் அறுவை சிகிச்சை பெறும் பதட்ட நிலைமையை தளர்த்தியது. ஆனால், தொடர்ச்சியான பணியால், அக்குழுவின் உறுப்பினர்கள், மிகுந்த களைப்படைந்தனர். ஒரு முறை, அறுவை சிகிச்சைகளை தொடர்ச்சியாக மேற்கொண்ட பிறகு, களைப்பு மற்றும் கடுமையான பீடபூமி சூழ்நிலையால், முக்கிய மருத்துவர் si congmei, அறுவை சிகிச்சை அலுவலகத்தில் மயக்கமடைந்தார். அவர் கூறியதாவது
அப்போது, கடும் தலைவலி, குமட்டல், வாந்தி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தேன். பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
1 2 3 4
|