
1 மணி 55 நிமிடத்துக்குப் பிறகு, அறுவை சிகிச்சையறையிலிருந்து மகிழ்ச்சியான தகவல் கிடைத்தது. ஆண் குழந்தையொன்று பிறந்த தகவல்தான் அது. தாயும், சேயும் பாதுகாப்பாக உடல் நலத்துடன் இருக்கின்றார்கள் என்ற செய்தி, குடும்பத்தினரை மகிழ்ச்சியடையச் செய்தது.
திபெத்திற்கான மருத்துவ உதவிக்குழு செய்த இந்த அறுவை சிகிச்சைதான், bu ren மாவட்ட வரலாற்றில் முதல் மகப்பேற்று அறுவை சிகிச்சையாகும். இதற்கு பிறகு, பல திபெத் மக்கள், கவலையேதுமின்றி, மேலை நாட்டு மருத்துவத்தை படிப்படியாக நம்பத் துவங்கினர்.
சிறப்பு தொழில் நுட்ப திறமைசாலிகளின் பற்றாக்குறையால், அக்குழு, bu ren மாவட்டத்துக்கு வருவதற்கு முன், அந்த மாவட்ட மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டு காலத்தில் எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை. அங்கிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ri kaze பிரதேசத்தின் மருத்துவமனை, ஏன் மேலும் தொலைதூர லாசா மருத்துவமனைக்கு சென்றுதான் மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். எனவே, நோயால் பீடிக்கப்பட்ட பலர், உரிய காலத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர். அவர்களில் சிலர், கோயிலுக்கு சென்று, நோய் நிலையை தாமதம் செய்ய மன்றாடுவர். திபெத்திற்கான மருத்துவர் si congmei கூறியதாவது
இந்த நிலைமையை கண்டு, எங்களுக்கு, ஒரு எண்ணம் தோன்றியது. அறிவியல் அறிவை பரவலாக்கும் வகையில், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வீடுகளுக்கு வெகுவிரைவில் செல்ல வேண்டும். நமது மருத்துவம், திபெத் உடன்பிறப்புகளின் நோய்களை நீக்கி, அவர்களது உயிரை காப்பாற்றவேண்டும் என்றார் அவர்.
1 2 3 4
|