உலக சீன வணிகர்கள் உச்சிமாநாட்டின் வட கிழக்காசிய பொருளாதார ஒத்துழைப்பு கருத்தரங்கு, அண்மையில், சீனாவின் வட கிழக்குப் பகுதியிலுள்ள jilin மாநிலத்தின் தலைநகரான Changchunனில் நடைபெற்றது. உலகின் சுமார் 40 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் சீன வணிகர் பிரதிநிதிகள் இந்நகரில் திரண்டு, ஒத்துழைப்புக்கான வாய்ப்பு மற்றும் வழிமுறைரகளை பற்றி விவாதித்தனர். வட கிழக்காசிய பிரதேசத்தின் வளர்ச்சி வாய்ப்புக்கள் மீது, இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
jilin மாநிலத்தில் தொடர்ந்து 4வது முறையாக நடைபெற்றுள்ள வட கிழக்காசிய முதலீட்டு வர்த்தகப் பொருட்காட்சியின் முக்கிய அம்சமாக, உலக சீன வணிகர்கள் உச்சி மாநாட்டின் வட கிழக்காசிய பொருளாதார ஒத்துழைப்புக் கருத்தரங்கு மாறியுள்ளது. சீன வட கிழக்குப் பகுதியிலுள்ள Heilongjiang, jilin, Liaoning ஆகிய மாநிலங்களும், உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசமும், வட கிழக்காசியாவின் மைய பிரதேசத்தில் அமைந்துள்ளன. இவை, ரஷியா, வட கொரியா, மங்கோலியா முதலியவ நாடுகளை ஒட்டி அமைந்துள்ளன. ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு அருகில் உள்ளன. தனிச்சிறப்பு வாய்ந்த பிரதேச மேம்பாடுகளால், இது, வட கிழக்காசிய பிரதேசத்தின் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு வளர்ச்சிக்கான மையமாகவுள்ளது. இந்த வணிக வாய்ப்பின் மீது, உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள சீன வணிகர்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். வட கிழக்காசிய பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி, எதிர்கால ஆசிய பிரதேச வளர்ச்சியின் முக்கிய பகுதியாக மாறும். சீன வணிகர்களின் முதலீட்டை ஈர்க்கும் முக்கிய இடமாகவும் மாறும். நடப்பு உலக வணிகர்கள் உச்சி மாநாட்டின் வட கிழக்காசிய பொருளாதார ஒத்துழைப்புக் கருத்தரங்கில், உலக சீன வணிகர் நிறுவன கூட்டணியின் நிர்வாக தலைவர் dingkaien இவ்வாறு கூறினார். அவர் கூறியதாவது:
சீன வணிகர்கள், சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான முக்கிய இயக்கு ஆற்றலாக கருதப்படுகின்றனர். சீன வணிகர்கள் தங்களது தொழிலை வளர்க்கும் முக்கிய தளமாக சீனா மாறியுள்ளது மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் எதிர்கால பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் இன்றியமையாத காரணியாகவும் சீனா மாறியுள்ளது. பொருளாதார உலகமயமாக்கத்தின் முன்னேற்றப் போக்கு ஏற்கனவே உருவாகியுள்ளது. பிரதேசப் பொருளாதார ஒத்துழைப்பு, 21ம் நூற்றாண்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப் போக்காக மாறும். வட கிழக்காசிய பொருளாதார ஒத்துழைப்பை, தென் கிழக்காசிய நாடுகள், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவை ஆக்கப்பூர்வமாக விரைவுப்படுத்தும். இந்த பிரதேசம், தனிச்சிறப்பு வாய்ந்த, விரைவாக வளரும் பிரதேசமாக மாறும். குறிப்பாக, இந்தப் பிரதேசத்தின் சந்தை, மங்கோலியா, ரஷியாவின் தொலை கிழக்குப் பிரதேசம் முதலிய பிரதேசங்களுக்கும் பரவும் என்றார் அவர்.
1 2 3 4
|