
இந்த கருத்தரங்கு நடைபெற்ற போது, சீன வட கிழக்குப் பகுதியில் சோதனை புரியுமாறு, அமெரிக்காவின் சீன வணிகர்கள் சம்மேளனத்தின் தலைவர் wuzongjin அமெரிக்காவிலுள்ள பல பத்து சீன வணிகர்களுக்கு அழைப்பு விடுத்தார். வட கிழக்கு சீனாவுக்கு அவர் இரண்டாவது முறையாக வருகை தந்தார். பல சீன வணிகர்கள் முதன் முறையாக இங்கு வருகை தந்தனர். அவர்கள் இங்குள்ள நிலைமையை அதிகமாக புரிந்துகொள்ளவில்லை. ஆனால், சோதனை மூலம், இங்குள்ள முதலீட்டுச் சூழல் பற்றி அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இங்கு ஹோடர் உள்ளிட்ட தொழில்களில், சில சீன வணிகர்கள் முதலீடு செய்ய விரும்புகின்றனர். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றதால், சீனப் பெருநிலப்பகுதியில் முதலீடு செய்வதில், சீன வணிகர்கள் நம்பிக்கை கொள்கின்றனர். இது குறித்து, அவர் கூறியதாவது:
இதற்கு முன்பு, Zhejiang மற்றும் Jiangsu கடற்கரை பிரதேசங்கள், Guangdong, Shenzhen ஆகிய பிரதேசங்களை சீன வணிகர்கள் ஆழமாகப் புரிந்துகொண்டனர். வட கிழக்கு சீனாவை தெளிவாக புரிந்துகொள்ளவில்லை. வட கிழக்குப் பகுதியிலுள்ள மாநிலங்களில் மக்கள் பலர் முதன்முறையாக வந்து, இப்பிரதேசத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள். சீன வணிகர்களைப் பொறுத்தவரை, எங்கே வணிக வாய்ப்பு உண்டோ, அங்கே முதலீடு செய்வதை அவர்கள் கருத்தில் கொள்வர் என்று அவர் கூறினார்.
1 2 3 4
|