வட கிழக்கு சீனாவின் மூன்று மாநிலங்கள், புகழ் பெற்ற பழைய தொழில் துறை தளங்களாக உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன், வேதியியல் தொழிற்துறை, இரும்புருக்கு, வாகனம் ஆகிய சீன கனரகத் தொழிற்துறைகள், இங்கு உருவாக்கப்பட்டன. இங்குள்ள தனிச்சிறப்பு வாய்ந்த மூல வள மேம்பாடு, சீன வணிகர்களை ஈர்க்கும் சிறந்த காரணமாகும். சீன வணிகர்கள், வட கிழக்காசிய பிரதேசத்தில் முதலீடு செய்வதால், மேம்பாடுகளில், ஒன்றின் தேவையை மற்றது நிறைவு செய்து, பரஸ்பரம் வெற்றி பெறலாம் என்று Jilin மாநில சமூக அறிவியல் கழகத்தின் தலைவர் bingzheng தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:
வட கிழக்காசிய வளர்ச்சியை மேலும் விரைவுப்படுத்துவதற்கு, புதிய தொழில் துறைகள் மற்றும் புதிய தொழில் நுட்பத்தை வளர்த்து, புதிய நிர்வாக அனுபவங்களை பயன்படுத்துவது தேவை. சீன வணிகர்கள் இவற்றைக் கொண்டிருக்கின்றனர். ஆனால், எங்களுக்கு குறைவு. சீன வணிகர்களின் நிதி, அனுபவம், தொழில் நுட்பம் ஆகியவற்றுக்கு நாங்கள் வாய்ப்புகளை வழங்கலாம். எடுத்துக்காட்டாக, தற்போது, தென் கிழக்கு சீன கடலோர பகுதியிலுள்ள சில மாநிலங்களின் உழைப்பு ஆற்றல் மிகுந்த தொழில் துறைகள், சீனாவின் உள் பிரதேசங்களுக்கு இடம் பெயர்க்கப்பட்டு வருகின்றன. வட கிழக்காசிய பிரதேசத்தில் அதிகமான மூல வளமும், ஏராளமான மனித வளமும் உள்ளன. தவிர, சிறந்த போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அங்கு உண்டு. இவையனைத்தும், பல சீன வணிகர்களின் புதிய முதலீட்டு இடங்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இரு தரப்பும் வெற்றி பெறும் இலட்சியம் இது ஆகும் என்று அவர் கூறினார்.
1 2 3 4
|