• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-11 22:23:43    
சீன தற்சார்பு தயாரிப்பு கார்

cri

2008 பெய்ஜிங் சர்வதேச கார் கண்காட்சி ஏப்ரல் திங்களில் நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்கண்காட்சி பெய்ஜிங்கில் நடைபெறுவது இது 10வது முறையாகும். உலகின் மற்றும் சீனாவின் புகழ்பெற்ற பல்வேறு பெரிய கார் கூட்டு நிறுவனங்கள், மோட்டார் உதிரிப்பாகத் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தத்தமது மிகப் புதிய உற்பத்தி பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களைக் கொண்டு இக்கண்காட்சியில் கலந்து கொண்டன. இவற்றில் சீனத் தற்சார்பு தயாரிப்பு கார்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்தக் கண்காட்சியில் சீனாவின் கார் தொழில் நிறுவனங்கள் மொத்தம் 50 வகை தற்சார்பு தயாரிப்பு கார்களைக் காட்சிக்கு வைத்துள்ளன. சீனாவின் தற்சார்பு புத்தாக திறனின் முன்னேற்றம் இதன் மூலம் தெரிகின்றது. எடுத்துக்காட்டாக, dong Feng கார் கூட்டு நிறுவனம், இக்கண்காட்சியில் சுழற்பொறியால் பெறப்படும் மின்னாற்றல் அதிகரிப்பு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல்முறையாகப் பின்னறை இல்லாத காரை மக்களுக்காகத் தயாரித்துள்ளது. Chery கார் கூட்டு நிறுவனம், 5 வகை மிகக் குறைந்தளவு மாசுபாடு வெளியேற்றத் திறனுடைய கார்களைக் காட்சிக்கு வைத்தன. புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த 5 வகை கார்கள் உயர் பாதுகாப்பு நிலையை எட்டியுள்ளன. தவிர, BYD, Jiang huai முதலிய கார் கூட்டு நிறுவனங்களும் தத்தமது புதிய தற்சார்பு தயாரிப்பு கார் மாதிரிகளை வெளிபடுத்தின. இது குறித்து, சீன கார் தொழில் சங்கத்தின் துணைத் தலைவர் Dong yang கூறியதாவது

ஒவ்வொரு கூட்டு நிறுவனமும், தத்தமது சீனத் தயாரிப்பு கார் மாதிரிகளை வெளியிடுகின்றன. அவற்றில் பெரிய ரகமோ சிறிய ரகமோ, புதிய மாதிரிகள் காண்பிக்கப்பட்டன என்றார் அவர்.

1 2 3 4 5