• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-11 22:23:43    
சீன தற்சார்பு தயாரிப்பு கார்

cri

தற்போது, உலகம் முழுவதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கும் பணியை பரவலாக்கும் சமூக பின்னணியில், பல கார் தயாரிப்பு கூட்டு நிறுவனங்கள் மாசுபாடில்லாத எரியாற்றலின் பயன்பாட்டில் கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக, சீன தனியார் கூட்டு நிறுவனமாக BYD கூட்டு நிறுவனம் நடப்பு கண்காட்சியில், சீனாவின் முதலாவது இரும்பு மின்கலனைப் பயன்படுத்தும் BYD F-6 ரக காரை விளம்பரப்படுத்தியுள்ளது. BYD கூட்டு நிறுவனத்தின் பணியாளர் வாங் தா வெய் கூறியதாவது

இந்தக் கார் இரும்பு மின்கலனின் ஆற்றலால் இயங்குகின்றது. தத்துவ ரீதியில், மாசுபாடு வெளியேற்றம் ஒன்றும் இல்லை என்றார் அவர்.

இரும்பு வளம் செழிப்பாக உள்ளது. தவிர, இரும்பு மின்கலன் பயன்படுத்தப்பட்டால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. சிறப்பாக கையாளப்பட தேவையில்லை. இவை எல்லாம், இரும்பு மின்கலனைப் பயன்படுத்தும் கார்களுக்கு வலுவான சந்தைக்கான போட்டி ஆற்றலை வழங்கியுள்ளன. இந்த புதிய ரக கார் இவ்வாண்டிற்குள் சந்தைக்குள் நுழையும் என்று BYD கூட்டு நிறுவனம் தெரிவித்தது.

1 2 3 4 5