• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-13 11:05:21    
கிராமப்புறத்திலான மூன்று பிரச்சினைகள்

cri

நீர் பாசநட் பகுதிகளில் நீர் சிக்கனம், அவசியம் நீர் தேக்கத்தினால் எழக் கூடிய பதட்டத்தை நீக்கி அணைக் கட்டுகளைச் செப்பனிட்டு வலுப்படுத்துவது, கிராமங்களை இணைக்கும் சாலை கட்டுமானங்களை நிறைவேற்றுவது ஆகியவை வேளாண் மற்றும் கிராமப்புறங்களிலான அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை வலுப்பத்துவதில் அடங்குகின்றன. இந்த குறிக்கோள்களை நிறைவேற்றுகின்ற போது விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலை பெரிதும் மேம்படும். இதன் மூலம் நவீன வேளாண்மை மற்றும் கிராமப்புறங்கள் மேலும் வளர்வதற்கு முக்கிய பொருளாதார அடிப்படை இடப்படும்.

கிராமப்புறங்களிலான பிரச்சினைகள் விளை நிலங்களை ஒப்பந்தம் மூலம் பயிரிடுவதுடன் தொடர்புடையவை. வேளாண் மயமாக்கத்தை நிறைவேற்றுவதன் மூலம் பாதி பிரச்சினையை தீர்க்கலாம். ஆனால் விளைநில புழக்கத்தை விரைவுப்படுத்தி வளர்ச்சிகரமான அலுவலை நடத்தாவிட்டால் நவீன வேளாண்மையை நனவாக்குவது கடினமானது. சீனாவின் ஆன்குவேய், கேன்சு, சியாங் சூ முதலிய மாநிலங்களின் கிராமப்புறங்களில் வாழ்கின்ற விவசாயிகள் தங்களது பங்குகளை பெறும் வகையில் சக ஒத்துழைப்பு வடிவத்தை புத்தாக்கி உருவாக்கியுள்ளனர். ஒப்பந்த பொறுப்பு மூலம் விளை நிலத்தை நிர்வகிக்கும் உரிமையை அளித்து தனது நிலத்திலிருந்தான வருமானத்தை பங்காக கிராமவாசிகள் பெறுகின்றனர். ஒத்துழைப்பு வடிவத்தில் அவர்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது வருமானத்தின் பங்கினைப் பகிர்ந்து கொள்கின்றனர். சீனாவின் குவான் துங் மாநிலத்தின் சில இடங்களில் விவசாய் குடும்பங்கள் ஒப்பந்த பொறுப்பு மூலம் விளை நிலத்தை நிர்வகிக்கும் உரிமையை கொண்டு கடன் வாங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். இத்தகைய புத்தாக்க வழிமுறைகள் தவிர, திறமைசாலிகளின் கல்வியறிவை வளர்ப்பது இந்த வேளாண் பிரச்சினைகளை தீர்ப்பதன் முக்கிய பகுதியாகும். சோஷலிச கிராமப்புறங்களை கட்டியமைக்கும் போக்கில் கல்வி, பயிற்சி, திட்டம், பயன்பாடு மற்றும் நிர்வாகம், புழக்கம், உத்தரவாதம் முதலியவற்றில் கிராமப்புறத்தில் வாழ்கின்ற திறமைசாலிகளுக்கு கல்வியளிக்க வேண்டும். இதன் மூலம் அங்குள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் திறமைசாலிகள் அணி உண்மையாக வலுப்படுத்தப்படும். கிராமப்புறக் கட்டுமானத்தை நிறைவேற்றுவதற்கான முக்கிய சக்திகள் பற்றி அவர்கள் பயிற்சியளிக்கப்படுவர். அதேவேளையில் கிராம நிலை விவசாயி வகுப்புக்கள் நடத்தப்படும். நகரங்களிலும் வட்டங்களிலும் பணிபுரிகின்ற விவசாயிகளுக்கென தொழில் நுட்ப பயிற்சி தொடர்பான தகவல் இணைய தளம் நிறுவப்படலாம். விவசாயிகள் எளிதான முறையில் இலவசமாக கல்வி பெறுதல் மூலம் அவர்களின் தொழில் நுட்ப நிலையை உண்மையாகவே உயர்த்த முடியும்.


1 2 3 4