![]( /mmsource/images/2008/11/27/081127-x-1.jpg) கலை.........வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.
தமிழன்பன்..........சரி, கேள்விக்கு பதில் அளிக்கும் இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து நேயர்கள் எழுப்பிய வினாவுக்கு விடை அளிக்கின்றோம்.
கலை......ஈரோடு சங்குநகர் வெ ராஜேஸ்வரி சீனாவின் பாரம்பரிய விழாக்கள் பற்றி அறியும் ஆவலுடன் அவற்றை விளக்க கேட்டுள்ளார்.
தமிழன்பன்........அப்படியானால் நாம் இன்றைய நிகழ்ச்சியின் விழாக்கள் பற்றி வெ ராஜேஸ்வரி அவர்களுக்கும் நேயர்களுக்கும் விளக்கி கூறலாமே.
கலை........நல்ல யோசனை. நாம் ஜனவரி முதல் நாள் முதல் சீனாவில் கொண்டாடப்படும் முக்கிய விழா நாட்களை குறிப்பிடலாம்.
தமிழன்பன்........ஜனவரி முதல் நாள் உலகளவிலான புத்தாண்டு நாளாகும். இது உலகம் முழுதும் கொண்டாடப்படுகின்றது. சீனாவிலும் விடுமுறை வழங்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது.
கலை........ஆமாம். அடுத்து சீனாவின் மிக முக்கிய விழா வசந்த விழாவாகும்.
தமிழன்பன்........வசந்த விழாவை சீன மக்கள் எந்த முறையில் கொண்டாடுகிறார்கள்.
கலை.......சீன தேசிய மக்கள் பேரவையின் புதிய தீர்மானத்தின் படி வசந்த விழாவின் முந்தின நாள் முதல் தொடர்ச்சியாக 7 நாட்கள் வசந்த விழா கொண்டாடப்படும். தங்க வாரம் என மக்கள் இவ்விழா காலத்தை வர்ணிக்கிறார்கள்.
தமிழன்பன்........இதை பற்றி அறிந்திருக்கிறேன். இளைஞர்கள் இந்த தங்க வாரத்தை பயன்படுத்தி பனி சறுக்கல் இடமான சீனாவின் வட பகுதியிலுள்ள ஹாஃர்பின் நகருக்குச் சென்று பனி சறுக்கல் விளையாடி பொழுதை மகிழ்ச்சியாக கழிக்கின்றனர்.
கலை..........அது மட்டுமல்ல விழா நாட்களில் மக்கள் தங்கள் உடன்பிறந்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரை சென்று பார்த்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். இந்நாட்களில் நகரங்களின் முக்கிய பூங்காக்களில் குதூகல கொண்டாட்ட நடவடிக்கைகள் நடைபெறும். கலை நிகழ்ச்சிகள் சிற்றுண்டி வியாபாரம், வர்த்தக சந்தை போன்ற பல்வகை நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் விழாவை கொண்டாடுகின்றார்கள்.
1 2 3 4
|