
தமிழன்பன்.......அடுத்து ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் வசந்த நாட்காட்டியின் படி சந்திர அல்லது நிலா விழாவாகும்.
கலை.......ஆமாம். அன்று சீன மக்கள் அனைவரும் 15ம் நாளிரவு நிலைவை பார்த்து விழாவை கொண்டாடுகின்றன.
தமிழன்பன்........இவ்விழாவைக் கொண்டாடும் போது உண்ணப்படும் சிற்றுண்டியின் பெயர் என்ன?
கலை.......அந்த சிற்றுண்டி நிலா கேக் என்று அழைக்கப்படுகின்றது.
தமிழன்பன்......விழாவைக் கொண்டாடும் வகையில் எதாவது மது அருந்த வேண்டும். அப்படிதானே.
கலை........நீங்கங் குறிப்பிட்டது சரிதான். மஞ்சள் மது அருந்துவது வழக்கம். மஞ்சள் மது சீனாவின் தென் பகுதியிலுள்ள ச்சுச்சியாங் மாநிலத்தில் தயாரிக்கப்படுகின்றது. அது அருந்துவதற்கு மிக சிறப்பானது. இது பற்றிய சுவையான வரலாற்று கதை உண்டு. அடுத்த முறை அந்த கதை பற்றி சிறப்பு நிகழ்ச்சி உருவாக்கலாம் என்று நினைக்கின்றேன்.
1 2 3 4
|