
தமிழன்பன்.......உண்மைதான் அவ்வாறு செய்வது சிறந்தது. அது சரி. நிலா விழா கடந்த பின் எந்த விழா வரும்?
கலை......அடுத்ததாக சீனத் தேசிய விழா கொண்டாடப்படுகிறது.
தமிழன்பன்.......அக்டோபர் முதல் நாள் நவ சீனா நிறுவப்பட்ட நாளாகும். 10வது 20வது 30வது போன்ற முக்கிய விழாநாள் வரும் போது சீன மக்கள் மிகவும் பிரமாண்டமாக தேசிய விழாவைக் கொண்டாடுவார்கள்.
கலை......ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் சீனா முழுவதும் தேசிய விழா கொண்டாட்டப்படுகிறது. இதற்கான தங்க வார கொண்டாட்டம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழன்பன்.......இது ஆண்டின் இரண்டாவது தங்க வாரமாகும். மக்கள் பொதுவாக அருகிலுள்ள ஊர்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள். அல்லது சீனாவின் கடற்கரையோரத்திற்குச் சென்று ஓய்வான அமைதியான வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வார்கள்.
கலை........சீனாவில் தேசிய அளவிலான முக்கிய விழாநாட்கள் இவ்வளவு தான். ஆனால் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு சொந்தமான விழா நாட்கள் அதிகமாக உள்ளன. சிறுபான்மை தேசிய இனங்களின் வழக்க படி அரசு அவர்களுக்கு சிறப்பு விழா கொண்டாட நாட்களை வழங்கியுள்ளது. 1 2 3 4
|