• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-04 15:08:13    
நிதி நெருக்கடியினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்

cri

கலை.....வணக்கம் நேயர்களே. இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் சந்திப்பதில் கமிழ்ச்சியடைகின்றோம். தற்போது நிதி நெருக்கடியினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சீனாவாலும் தவிர்க்கப்பட முடியவில்லை. இருப்பினும் சீனா உற்சாகத்துடன் இந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

தமிழன்பன்......அப்படியிருந்தால் சீனா எப்படி இந்த பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கிறது என்பது பற்றி இன்றைய நிகழ்ச்சியில் கூறலாமே.

கலை.... நிச்சயமாக. உலக நிதி நெருக்கடியால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு அதிகரித்ததுடன், கடினமான வேலை வாய்ப்பு நிலைமையையும் சீனா எதிர்நோக்கி வருகின்றது. மதிப்பீட்டின் படி, இவ்வாண்டின் இறுதி முதல் 2009ம் ஆண்டு வரை, சீனாவில் வேலையற்றோர் விகிதம் உயரும்.

தமிழன்பன்......இந்த நிலைமையில் இவ்வாண்டின் இறுதியில், நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வேலையற்றோர் விகிதம் எத்தனை விழுக்காட்டை எட்டியது.

கலை....இது 4.5 விழுக்காட்டை எட்டக் கூடும் இதைக் கட்டுப்படுத்தும் வகையில், சீன அரசு உரிய நடவடிக்கைகளை உற்சாகத்துடன் மேற்கொண்டுள்ளது.

1 2 3 4