• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-04 15:08:13    
நிதி நெருக்கடியினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்

cri

தமிழன்பன்......இவ்வாண்டின் முதல் 9 திங்களில் சீனாவின் வேலை வாய்ப்பு பெறுதல் நிலைமை அடிப்படையில் நிதானமாகியுள்ளது. நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வேலையற்றோர் விகிதம் 4 விழுக்காடாகும்.

கலை.....இருப்பினும், அக்டோபர் திங்கள் முதல், வேலை வாய்ப்பைப் பெறும் நிலைமை மென்மேலும் கடினமாக இருந்து வருகின்றது. நகரங்களில் வேலை வாய்ப்பைப் பெறுவோரின் எண்ணிக்கை விரைவாக குறைந்தது. தொழில் நிறுவனங்களின் பணியாளர் தேவை கோரிக்கை குறையத் தொடங்கியது. தொழில் நிறுவனங்களில் ஏற்கனவேயுள்ள பணித் தலங்கள் விரைவாக குறைந்தன.

தமிழன்பன்......மேற்கூறிய நிலைமைகள், கடந்த பல ஆண்டுகளில் முதன்முறையாக காணப்பட்டவை. சரிதேனே.

கலை....... ஆமாம். நவம்பர் 20ம் நாள் சீன அரசவையின் செய்தி அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சீன மனித வள மற்றும் சமூக உத்தரவாத அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் மேற்கூறிய தகவலை தெரிவித்தார்.

தமிழன்பன்......தற்போது வேலை வாய்ப்பைப் பெறுவதிலான நிர்ப்பந்தத்தை தணிவுப்படுத்தும் வகையில், 4 துறைகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய வாரியங்கள் ஏற்பாடு செய்துள்ளன என்று சீன மனித வள மற்றும் சமூக உத்தரவாதத்துறையின் துணை அமைச்சர் Zhang Xiaojian தெரிவித்தார்.

கலை.....இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:

தமிழன்பன்......முதலாவதாக, தொழிலாளர்களை நிதானப்படுத்த தற்போது, நிறுத்த அல்லது பாதியாக நிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு எல்லா வழிகளிலும் உதவி செய்ய வேண்டும். இரண்டாவதாக, வேலை வாய்ப்பு அதிகரிப்பை, உள் நாட்டுத் தேவையின் விரிவாக்கத்துடன் மேலும் நெருக்கமாக இணைப்பதை முன்னேற்றி, உற்பத்தி மற்றும் செயல்பாட்டு நிலைமை சீராக அமையும் வளரும் தொழில் நிறுவனங்களை ஆதரிக்க பாடுபட வேண்டும். மூன்றாவதாக, கொள்கை ஆதரவையும் வேலை வாய்ப்புச் சேவையையும் வலுப்படுத்த வேண்டும். இறுதியாக, முழுச் சமூகத்திலும் பெரிய அளவிலான தொழிற்பயற்சி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கலை.......தற்போது, சீனாவின் நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வேலையற்றோர் விகிதத்தில், பல்வேறு நகரங்களில் வெவ்வேறு இடங்களில் மாறி மாறி வேலை செய்யும் 20 கோடி விவசாயத் தொழிலாளர்கள் அடங்கவில்லை.

1 2 3 4