• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-04 15:08:13    
நிதி நெருக்கடியினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்

cri

கலை.....தவிர, விவசாயத் தொழிலாளர்கள் மேலதிக தொழில் நுட்பச் செயல்திறனை அதிகரித்து, தமது கல்வியறிவை உயர்த்தி, மறு வேலை வாய்ப்பை பெறும் வகையில் பல்வேறு இடங்களின் உழைப்பு உத்தரவாத வாரியங்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆற்றலை வலுப்படுத்தும். அத்துடன், விவசாயத் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமை நலனை பேணிக்காப்பதில் உழைப்பு உத்தரவாத வாரியங்கள் முக்கியமாக கவனம் செலுத்தி, விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை காலதாமதமின்றி அளிக்குமாறு தொழில் நிறுவனங்களை வற்புறுத்தும் என்று Yin Xiangmin குறிப்பிட்டார்.

தமிழன்பன்.......அண்மையில் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான 4 இலட்சம் கோடி யுவான் மதிப்புள்ள திட்டத்தை சீன அரசு வெளியிட்டது. உள் நாட்டுத் தேவையை விரிவாக்கி பொருளாதராத்தின் அதிகரிப்பை விரைவுப்படுத்தும் வகையில், அடிப்படை வசதிகளின் கட்டுமானம் மற்றும் சமூகக் காப்புறுதித் துறைகளுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.

கலை.....நாட்டின் ஒட்டுமொத்த கொள்கைக்கும் தற்போதயை பொருளாதார நிலைமைக்கும் இணங்க, இவ்வாண்டின் இறுதியில், நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வேலையற்றோர் விகிதத்தை 4.5 விழுக்காட்டுக்குள் கட்டுப்படுத்தும் குறிக்கோள் நனவாக முடியும் என்று சீன மனித வள மற்றும் சமூக உத்தரவாத அமைச்சகத்தின் துணை அமைச்சர் Zhang Xiaojian தெரிவித்தார். உள் நாட்டின் தேவையை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேலும் நடைமுறைப்படுத்துவதுடன், 2009ம் ஆண்டிலான வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பணிக்கு ஆக்கப்பூர்வ பங்காற்றும் என்றும் அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

தமிழன்பன்.......தற்போது, சீனாவின் பொருளாதார வளர்ச்சி நிலைமை சீராக உள்ளது. குறிப்பாக, உள் நாட்டுத் தேவையை விரிவாக்குவது பற்றிய 10 முக்கிய நடவடிக்கைகளை நடுவண் அரசு வெளியிட்டது. எனவே, 2009ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புப் பெறுதலை முன்னேற்ற முடியும் என்று மதிப்பிட்டுள்ளோம். அத்துடன், ஏற்கனவேயுள்ள வேலை வாய்ப்புப் பெறுவது தொடர்பான கொள்கைகள், நடைமுறையில் குறிப்பிட்டதக்க பயனுள்ளவை என்றார் அவர்.

கலை.....நேயர்கள் இது வரை பொருளாதார நெருக்கடியை சீனா எப்படி சமாளிக்கிறது என்பது பற்றி கேட்டீர்கள்.

தமிழன்பன்.......இத்துடன் இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.

கலை.... அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம். வணக்கம் நண்பர்களே.


1 2 3 4