தமிழன்பன்......தொழிலாளர்கள் அதிகமாகவுள்ள வகையான தொழில் நிறுவனங்கள் இந்த நிதி நெருக்கடியால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல விவசாயத் தொழிலாளர்கள் இத்தொழில் நிறுவனங்களில் பணி புரிகின்றனர். தொழில் நிறுவனங்களுக்கான முன்பதிவுப் படிவங்களின் எண்ணிக்கை குறைந்ததால், வேலை வாய்ப்பை இழந்த விவசாயத் தொழிலாளர்கள் பலர் தஙகளது சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
கலை......இது வரை, தொழில் நிறுவனங்கள் பெருமளவில் தொழிலாளர்களை குறைக்கவில்லை. ஆனால், ஊருக்கு திரும்பும் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கின்றது. இந்நிலைமை தொடர்புடைய வாரியங்களின் கூரிய கவனத்தை ஈர்த்துள்ளது என்று சீன மனித வள மற்றும் சமூக உத்தரவாதத்துறை அமைச்சர் Yin Wiming தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
தமிழன்பன்......நாங்கள் முக்கியமாக இரண்டு வழிமுறைகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். முதலாவதாக, விவசாயத் தொழிலாளர்களின் புழக்கத்தில் கவனம் செலுத்தியதோடு, இதற்கு நியாயமாகவும் ஒழுங்காகவும் வழிகாட்டி, வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு அவர்களுக்கு சேவை புரிந்துள்ளோம். வேலையிழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு முன்னர் அவர்கள் பணி புரிந்த வாரியங்கள் அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுதல் பற்றிய சேவை மற்றும் தகவல்களை ஆக்கப்பூர்வமாக வழங்க நாங்கள் கோரியுள்ளோம். இரண்டாவதாக, வேலை இழந்து தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களின் சொந்த ஊர்களது உழைப்பு உத்தரவாத வாரியங்கள், உள்ளூரில் வேலை வாய்ப்புப் பெறுவதற்கும் தொழில் நடத்துவதற்கும் ஆதரவையும் உதவியையும் வழங்க நாங்கள் கோரியுள்ளோம்.
1 2 3 4
|