சீனாவின் மிக பெரிய கணினி குழுமமான Lenovo குழுமம், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மேல்மட்ட நிதி ஆதரவாளராக இருந்து, இவ்வாண்டு பெரிய நலன் பெற்றுள்ளது. தற்போது, 1680 கோடி அமெரிக்க டாலர் வருமானத்துடன், இவ்வாண்டின் உலகின் 500 முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகின் மிக அதிக கவனத்தை ஈர்க்கின்ற விளையாட்டு விழாவாகும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டி, உலகின் பல கோடி மக்கள் பார்த்து மகிழ்கின்றனர். அதனால், இப்போட்டிக்கு நிதி உதவி அளிக்கும் உரிமையை பெற, பல்வேறு தொழில் நிறுவனங்கள் விரும்புகின்றன. இது பற்றி நீண்டகாலமாக விளையாட்டு வாணிகத்தில் ஈடுபட்டு வரும் ஒரு தொழில் நிறுவனத்தின் தலைவரான zhu xiaoming கூறியதாவது,
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி, வரலாற்றில் மிக அதிக நாடுகள் கலந்து கொண்ட ஒரு போட்டியாகும். எனவே ஒலிம்பிக் போட்டிக்கு நிதி ஆதரவு அளித்தால் அது, தொழில் நிறுவனங்களின் திறனையும் வெளிப்படுத்தும் என்றார் அவர்.
1 2 3 4
|