இந்த கருத்துடன், 2004ம் ஆண்டு மார்ச் திங்களில், Lenovo குழுமம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒத்துழைப்புக் கூட்டாளியாக மாறியது. இதன் மூலம், இத்தகுநிலை பெற்ற முதல் சீன தொழில் நிறுவனமாக மாறியது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக, Lenovo குழுமம், பல பணிகள் மேற்கொண்டது. அவற்றில், ஒலிம்பிக் தீபத்தை வடிவமைப்பதும் அடங்கியது. அக்குழுமத்தின் துணைத் தலைவர் yao yingjia, ஒலிம்பிக் தீபத்தை வடிவமைத்த முக்கிய வடிவமையாளராவார். ஆகஸ்ட் 8ம் நாள், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட போது, அவர் வீட்டில் தொலை காட்சியைப் பார்த்தவாறு வெளியிலிருந்து கேட்ட ஆரவாரத்தைக் கவனித்தார். அவர் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த விழா அப்போது துவங்கியது. இது குறித்து அவர் கூறியதாவது,
இந்தப் பிரமண்டமான விழா துவங்கியது. வெளியே வெவ்வேறு குடும்பங்களின் ஏற்படுத்திய ஆரவார ஒலிகளைக் என் ஜன்னல் வழியாக கேட்டேன். அவர்கள் சீனாவுக்காக ஆரவாரம் செய்தனர். ஒலிம்பிக் தீபம், இத்தனை மக்களுக்கு உற்சாகம் அளித்தை நான் உடனடியாக உணர்ந்தேன். அந்த தருணத்தில் நான் உணர்வுபூர்வமாக மகிழ்ந்தேன் என்றார் அவர்.
தீபத்தை வடிவமைப்பது மட்டும், Lenovo குழுமம், பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்காக செய்த பணி அல்ல. அதைத் தவிர, உலகின் 200க்கு மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிக் குழுகளுக்கு, Lenovo குழுமம் கணினிவசதிகள், நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு அளித்தது. தவிர, ஏழு நகரங்கள் மற்றும் 38 விளையாட்டு அரங்குகளுக்கான தகவல் தொடர்பு முறைமையை உருவாக்கியது. ஒலிம்பிக் தகவல் தொடர்பு முறைமையின் கடின வன்பொருள் Lenovo குழுமத்தினால் உருவாக்கப்பட்டது. இவை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் செயல்பாடு மற்றும் ஏற்பாட்டு மேலாண்மையை பேணிகாத்தது.
1 2 3 4
|