
தீபத்தை வடிவமைப்பது மட்டுமே, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக செய்த பணி அல்ல. மொத்தம் 30 ஆயிரத்துக்கு அதிகமான இணையத்தள வசதிகளை Lenovo குழுமம் வழங்கியது.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெற்ற மாபெரும் வெற்றியில், Lenovo குழுமம் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது. தனது பணிகளை அது செவ்வனே மேற்கொண்டது, இதன் மூலம் தனது செல்வாக்கை உலகளவில் மேலும் உயர்த்தியுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, Lenovo குழுமத்திற்கு எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டு வந்தது. அவர் கூறியதாவது,

ஒலிம்பிக்கிற்கு நிதி உதவி வழங்கியதால் பெற்ற பயன், மிக தெளிவானது. எங்கள் குழுமத்தின் மதிப்பு, 4 ஆண்டுகளுக்கு முந்தைய 300 கோடியிலிருந்து, தற்போது 1700 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இலாபமும், குறைந்தது 3 மடங்கு அதிகரித்தது. மேலும் முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியைப் பயன்படுத்தி, உலகளவில் எங்கள் குழுமத்தின் செல்வாக்கையும் புகழையும் பரவாக்கியுள்ளோம்.
இப்போது, பெய்ஜிங் ஒலிம்பிக்கை பயன்படுத்தி, Lenovo குழுமம் தனது கனவை முழுவதுமாக நனவாக்கியுள்ளது. பிற சீன தொழில் நிறுவனங்களுக்கு அருமையான எதிர்காலத்தையும் உருவாக்கியது. 1 2 3 4
|