இதனால் தான், பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு நிதி ஆதரவு அளிக்க Lenovo குழுமம் முடிவெடுத்தது.
20 ஆண்டு கால வரலாறு கொண்ட தொழில் நிறுவனமாக, அது நிறுவப்பட்டது முதல், முன்னேறிய நுட்பம் அமைந்த தனிநபர் கணினி உற்பத்தியால், சீனாவின் கணினி துறையில் இடைவிடாமல் முன்னேற்றம் அடைந்துள்ளது. 1994ம் ஆண்டு, அது, ஹாங்காங் பங்கு சந்தையில் நுழைந்தது. 2005ம் ஆண்டு, 125 கோடி அமெரிக்க டாலர் விலை கொடுத்து, உலகின் மிக புகழ் பெற்ற IBM தொழில் நிறுவனத்தின் அனைத்து தனிநபர் கணினி வணிகத்தையும் Lenovo குழுமம் வாங்கியது. அதற்குப் பின், உலக கணினி சந்தையில் Lenovo 3வது இடம் வகித்துள்ளது.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு நிதி உதவி அளிப்பது, Lenovoஇன் சர்வதேச அளவில் வளர்வதற்கு மிக பெரிய ஊந்து விசையை ஏற்படுத்துவதில் ஐயமில்லை. இது குறித்து Lenovo குழுமத்தின் தலைவர் yang yuanqing கூறியதாவது,
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, முதன்முதலாக சீனாவில் நட்ததப்படுகிறது. சீனாவைச் சேர்ந்த ஒரு தொழில் நிறுவனமாக, Lenovo, அதற்கு முக்கிய பங்காற்றும் பொறுப்பு உண்டு. தவிர, ஒலிம்பிக், ஒரு நல்ல விளம்பர மேடையாகும். Lenovo இன் வணிக சின்னத்தை உலகளவில் பரவாக்குவதற்கு அது உதவி புரியும். குறிப்பாக, IBM தொழில் நிறுவனத்தின் தனிநபர் கணினி வணிகத்தை வாங்கிய பின், உலகளவில் ஒரு தொழில் நிறுவனமாக Lenovo மாறுவது, மேன்மேலும் முக்கியமானது என்றார் அவர்.
1 2 3 4
|