
 லியூ சியாங் யாங் என்பவர், பெய்ஜிங்கிலுள்ள ஓர் இராணுவ மண்டலத்தைச் சேர்ந்த ராணுவப் பொறியியலாளர் குழுவின் துணைத் தலைவராகவும் சீனச் சர்வதேச மீட்புதவி அணியின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.
இவ்வாண்டு மே திங்கள் 12ஆம் நாள் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவான் பிரதேசத்தில் ரிக்டர் அளவையில் 8.0 ஆக பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. அடுத்த நாள் விடியற்காலையிலேயே, சீனத் தேசிய மீட்புதவி அணி லியூ சியாங் யாங்கின் தலைமையில் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு விரைந்து சென்றது. சிச்சுவான் மாநிலத்தின் து ஜியாங் யன் நகரின் சீன பாரம்பரிய மருத்துவமனையில், 3 மணி நேர மீட்புதவிப் பணி மூலம், உயிர் தப்பியவர் ஒருவர் லியூ சியாங் யாங் மற்றும் அவரது அணியால் முதலில் காப்பாற்றப்பட்டார். உரிய நடவடிக்கை மற்றும் சிகிச்சையினால், உயிர் தப்பிய இவரின் கால் வெட்டியெடுக்கப்பட வேண்டிய அபாயம் தவிர்க்கப்பட்டது. உயிருக்கு மதிப்பளிப்பது என்பது, சீனச் சர்வதேச மீட்புதவி அணியின் அதியுயர் மற்றும் ஒரேயொரு இலக்காகும் என்று லியூ சியாங் யாங் கூறினார்.
1 2 3 4
|