

இன்னல்களைச் சமாளிக்கும் பாதை கடினமானது. லியூ சியாங் யாங் அவரது அணியினர் பலரைப் போல் தொழில் சார் நோயை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மீட்புதவிப் பணிக்காக குடும்பத்தினருடன் பழகும் நேரத்தையும் அவர்கள் தியாகம் செய்துள்ளனர். துணைத் தலைவரான லியூ சியாங் யாங் மேலும் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளார். அவரது மகளின் பார்வையில், மிகச் சில முறையில் வீடு திரும்பும் தந்தையாக லியூ சியாங் யாங் விளங்குகிறார். ஆனால் பெரும் முயற்சிக்கு நல்ல பயன் கிடைத்தது. லியூ சியாங் யாங்கின் தலைமையில் சீனச் சர்வதேச மீட்புதவி அணி உலகளவில் வலிமைமிக்க ஒரு மீட்புதவி அணியாக மாறியுள்ளது. 1 2 3 4
|