• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-10 17:35:07    
ஆணையாளர் லியூ சியாங் யாங்

cri

சீனச் சர்வதேச மீட்புதவி அணி 2001ஆம் ஆண்டு ஏப்ரர் திங்கள் நிறுவப்பட்டது. இவ்வணியை உருவாக்கிய ஒரு முக்கிய உறுப்பினர் என்ற முறையில், பயிற்சி மற்றும் நிர்வாகப் பணிக்கு லியூ சியாங் யாங் அப்போது பொறுப்பேற்றார். அதற்குப் பின், உடல் திறன் மற்றும் தொழில் நுட்பத்துக்கான பயிற்சி பெறுவதிலும், தத்துவம் மற்றும் ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வதிலும் அவர் ஊன்றி நின்று வருகிறார். சீன நிலநடுக்க நிர்வாகப் பணியகத்தின் நிபுணரின் வழிகாட்டுதலில், மீட்புதவிப் பணித் தொடர்பான 11 பாட நூல்களை தொகுத்து எழுதுவதற்கு அவர் ஏற்பாடு செய்தார். இத்துறையில் அதிகாரப்பூர்வ பாட நூல் சீனாவுக்கு இல்லை என்ற வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளது. படிப்பு, பயிற்சி, போட்டி ஆகியவற்றுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 30க்கு மேற்பட்ட முறைகளில், லியூ சியாங் யாங் அவரது அணியினரை அழைத்துச் சென்று, செங்குத்தான கிணற்றில் மீட்புதவி, உயிர் வாயு இல்லாத இருளில் தேடுதல் உள்ளிட்ட 10க்கு அதிகமான மீட்புதவி முறைகளைக் கண்டறிந்துள்ளார்.

1 2 3 4